Uncategorized

10 banks that offer the lowest interest rate on education loans

10 banks that offer the lowest interest rate on education loans

10 banks that offer the lowest interest rate on education loans

இந்தியாவில் கல்வி கடனை குறைந்த வட்டியில் கொடுக்கும் 10 வங்கிகளின் பட்டியல்..!

இந்தியன் ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் என்பதை பார்த்தோம்.

அதுமட்டுமின்றி விரைவில் மேலும் 40 புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்த போவதாக செய்திகள் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதனால் கடன் வாங்குபவர்களுக்கு இனி பெரும் திண்டாட்டம் தான் என்றும்,ஏற்கனவே கட்டிவரும் கடனை முடிக்க அதிக தொகை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உயர் படிப்புக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இது சோதனையான காலகட்டமாக இருக்கப்போகிறது.

கல்வி கடனுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மாணவர்களுக்கு குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது

இருப்பினும் ஒரு சில வங்கிகள் 7.3 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களை கல்விக் கடனாக வழங்கி வருகிறது, அவ்வாறு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கிவரும் வங்கிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூபாய் 20 லட்சம் கல்வி கடனுக்கு 6.85% வட்டி விகிதமும் 7 வருட கால அவகாசம் கொண்ட அத்தகைய கடனுக்காக மாதம் ரூபாய் 30,000/- ஆக இருக்கும்.

இந்தியன் வங்கி

மலிவான கல்விக் கடன்களை வழங்கும் முதல் 10 கடன் வங்கிகளில் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியும் ஒன்று இந்த வங்கி கல்விக் கடனுக்கு 6.9 சதவீதம் வட்டி பெறுகிறது, ரூபாய் 20 லட்சம் கடன் வாங்கினால் மாத தவணையாக ரூபாய் 30,088/-செலுத்த வேண்டும்.

ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளும் 7 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்குகிறது, தோராயமாக 20 லட்சம் கல்விக்கடன் நீங்கள் வாங்கினால் மாத தவணையாக கட்டாயம் ரூபாய் 30,185/-செலுத்த வேண்டும்.

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டு முன்னணி பொதுத் துறை வங்கிகளில் 7.15 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்குகிறது.

ஒருவேளை இந்த வங்கியில் நீங்கள் கல்விக் கடன் 20 லட்சம் ரூபாய் வாங்கினால் 7 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய முதன்மை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது.

7 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலம் கொண்ட 20 லட்சம் கடனில் மாதம் ரூபாய் 30,340/-இருக்கும்.

ரூபாய் 5 லட்சம் வரை இலவச மருத்துவம்

அதேபோல் அரசு வங்கிகளான பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கும் வட்டி விகிதத்தை வாங்குகிறது.

What are the Kidney failure reason in tamil

கனரா வங்கி

இந்த வங்கி கல்விக் கடனுக்கு 7.30% சதவீதம் வட்டியை பெறுகிறது, அரசுக்கு சொந்தமான வங்கியில் ரூ 20 லட்சம் கல்வி கடனுக்கான ஒவ்வொரு மாதமும் 30,480/- தவணை கட்டாயம் செலுத்த வேண்டும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0