Uncategorized

10 Simple Tips to Reduce Snoring in tamil

10 Simple Tips to Reduce Snoring in tamil

10 Simple Tips to Reduce Snoring in tamil

டிவி விளம்பரங்களில் அல்லது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் கேலி கிண்டல் செய்யப்பட்ட ஒரு விஷயம்தான் தூங்கும் போது ஏற்படும் தேவையற்ற சத்தம்.

இது உண்மையில் பல நபர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமலும்.

இதை பற்றி வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நினைப்பார்கள் என்ற கவலையிலும் நிறைய நபர்கள் இப்போது இருக்கிறார்கள்.

நாம் தூங்கும்போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி தொடர்ந்து சுவாசிப்பதால் குறட்டை சத்தம் ஏற்படுகிறது.

சுவாசத்தில் ஏற்படும் இந்த இடையூறு காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிக அளவில் அதிர்ந்து குறட்டை ஒலியை எழுப்பி விடுகிறது.

குறட்டையால் அருகில் இருக்கும் உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையின் தூக்கம் கெடுகிறது, குறட்டை ஏற்பட உடல் எடை, வாய், நாக்கு தொண்டை கோளாறு, தூக்கமின்மை பிரச்சினை, ஆகியவை முக்கிய காரணமாக இருக்கலாம்.

தூங்கும் முன் மது அருந்தினால் கூட குறட்டை சத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

10 Simple Tips to Reduce Snoring in tamil

அதிக சத்தமான குறட்டை, அடிக்கடி குறட்டை, தூங்கும் போது மூச்சுத்திணறல், காலை எழுந்தவுடன் தலைவலி இருப்பது, வறண்ட தொண்டை உடன் விழித்தல், ஞாபக மறதி அதிகமாக, பகல் நேரத்தில் தூக்கம், அதிகமாக இருப்பது ஆகியவை இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

பின்வரும் எளிய குறிப்புகள் மூலம் இதனை குணப்படுத்தலாம்.

தண்ணீர்

உடலில் நீர் பற்றாக்குறையால் அதிக அளவில் சளி உண்டாகிறது இதனால் கூட நாசியில் அடைப்பு ஏற்பட்டு குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும் குறட்டை பிரச்சனை இருந்தால்.

10 Simple Tips to Reduce Snoring in tamil

புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்

சுவாசப் பாதையில் புண்கள் அல்லது அடைப்பு எரிச்சல் உண்டாக்குவதால் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தால் குறட்டை தொல்லை மெல்ல மெல்ல அதிகமாக உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

தூக்க மாத்திரை கூடாது

ஒருவேளை நீங்கள் அதிகமாக தூங்கினால் குறட்டை ஏற்படும் எனவே தூக்க மாத்திரைகளை தவிர்ப்பது குறட்டைசத்தத்தை குறைப்பதற்கு உதவும் அதுமட்டுமில்லாமல் உடல் நலத்திற்கும் நல்லது.

பழங்கள்

உணவில் மெலடோனின் அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் உண்டாகும் எனவே மெலடோனின் அதிகமுள்ள வாழைப்பழம், அன்னாசிபழம், கமலாபழம், ஆகியவை சாப்பிட்டு வரலாம் குறட்டை சட்டத்தை குறைப்பதற்கு.

பால் குடிக்கலாம்

பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும் சில நேரங்களில், பால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாத இன்றைய காலகட்டங்களில்.

இருப்பினும் தூங்கும் முன் பால் அருந்துவதை முடிந்த அளவு குறைத்து விடுங்கள்.

தேன் இஞ்சி

இந்த 2 பொருட்களும் பழங்காலத்திலிருந்தே சிறந்த மருத்துவ குணங்களாக இருக்கிறது. இதனை பற்றி அதிகமாக நீங்கள் சமூக வலைதளம் மற்றும் வலைத்தளங்களில் படித்து இருப்பீர்கள்.

what are the reason waking up in the Midnight

இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும், தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர், அருந்தினால் குறட்டை தொல்லை விரைவில் குறையும்.

ஆல்கஹால் அருந்தக்கூடாது

தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் இதனை தவிர்ப்பது, இதற்கு மட்டுமல்ல பல்வேறு வகையான உடல் உபாதைகள் மற்றும் சமூகத்துக்கும் நல்லது.

8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள்

தலையை உயர்த்தி தூங்கவும்

தலையணை கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சுவாசம் சீராக நடைபெறும், இதனால் உங்களுக்கு  குறட்டை சத்தம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக அமையும்.

How to prevent covid-19 3rd wave

உடல் எடையை கட்டாயம் குறைக்கவும்

உடல் பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொண்டைப் பகுதியில் கொழுப்பு திசு மற்றும் மலிவான தசை இருப்பதால் குறட்டை ஏற்படுகிறது, எனவே உடல் எடை குறைப்பது மிகமிக அவசியம்.

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
2
Not Sure
0
Silly
0