Uncategorized

10 times increase transport service charge in tn

10 times increase transport service charge in tn

10 times increase transport service charge in tn

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி போக்குவரத்து துறை சேவை கட்டணங்கள் 10% உயர்வு..!

தமிழகத்தில் இப்பொழுது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு, அடுத்தபடியாக தமிழக அரசு போக்குவரத்து சேவைகளுக்கான.

பல்வேறு கட்டணங்களை அதிகபட்சம் 10 மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

புதிய விலையேற்றம்

தமிழகத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் இந்த கட்டண உயர்வுகள் பொது மக்களை பாதிக்காத வகையில் அமல்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்தது.

அதுமட்டுமின்றி மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை மாநில அரசுக்கு இருப்பதாக தெரிவித்தது.

இதற்கு பாஜக கட்சி மற்றும் அதன் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதுமட்டுமில்லாமல் அதனைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள்.

போக்குவரத்து சேவை கட்டணம்

தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த மாநில அரசு இப்பொழுது முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்காக மோட்டார்வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவானது கடந்த ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

கால அவகாசம் முடிந்தும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

10 மடங்கு உயரம் சேவை கட்டணங்கள்

அதன்படி வாகன சோதனை மையங்கள் அதற்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம்.

இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தல்.

இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம்.

போக்குவரத்து ஆணையரின் உத்தரவு எதிரான மேல்முறையீடு கட்டணம்.

சிஎப்எக்ஸ் (CFX ) நோட்டீஸ் திரும்பப் பெறுதல்.

தற்காலிக பதிவு மற்றும் தற்காலிக பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தல்.

பிற மண்டல வாகனங்களின் பிட்னஸ் தகுதி சான்று அனுமதி கட்டணம்.

ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் வெளியீடு.

தகுதி சான்றிதழ் நகல் கட்டணம்.

மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு கட்டணம்.

உள்ளிட்ட 10 சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கட்டண உயர்வு தொகை எவ்வளவு

அதன்படி வாகன சோதனை மையங்கள் அதற்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம்,ரூபாய் 1000/-ல் இருந்து ரூபாய் 5000/-

இந்த மையத்தின் அங்கீகாரத்தை புதுப்பித்தல்,ரூபாய் 500/-ல் இருந்து ரூபாய் 3000/-

இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமத கட்டணம், மாதத்திற்கு 100 ரூபாய் என்ற அளவில் இருந்து, இனி வரும் நாட்களில் மாதம் ரூபாய் 200 ஆக நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையரின் உத்தரவு எதிரான மேல்முறையீடு கட்டணம்,ரூபாய் 100/-ல் இருந்து ரூபாய் 500/-

சிஎப்எக்ஸ் (CFX ) நோட்டீஸ் திரும்பப் பெறுதல்,ரூபாய் 30/-ல் இருந்து ரூபாய் 50/-

தற்காலிக பதிவு மற்றும் தற்காலிக பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தல்,ரூபாய் 500/-ல் இருந்து ரூபாய் 200/-

பிற மண்டல வாகனங்களின் பிட்னஸ் தகுதி சான்று அனுமதி கட்டணம்,அனுமதி கட்டணம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிதாக ரூபாய் 500 நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் வெளியீடு,ரூபாய் 75/-ல் இருந்து ரூபாய் 400/-

தகுதி சான்றிதழ் நகல் கட்டணம்,இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரூபாய் 250 ஆக உயர்த்தப்பட உள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு கட்டணம்,ரூபாய் 50/-ல் இருந்து ரூபாய் 500/-உயர்தர திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகலாம் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த கடுமையான கட்டண உயர்வுக்கு என்ன காரணம்

தமிழகத்தில் நிதி நெருக்கடியை அரசு எதிர்கொண்டுள்ளது இதனை சமாளிக்க நோக்கில் போக்குவரத்து துறையை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டது.

பத்திர பதிவு பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான 16 விஷயங்கள்..!

இதற்கு முன்பு இந்த சேவைகளுக்கான கட்டணம் 2006-2007 கட்டத்தில் திருத்தப்பட்டடு மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

Annamalai planning to strengthen booth agent

இருப்பினும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமைக்கான கட்டணம்,வாகன வரி,எல்எல்ஆர், உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யவில்லை என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம் பொதுமக்களுக்கு.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0