செய்திகள்

நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து இருந்தால் அது சட்டப்படி குற்றம்..!1000 fine if you have two PAN cards in tamil

1000 fine if you have two PAN cards in tamil

1000 fine if you have two PAN cards in tamil

நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து இருந்தால் அது சட்டப்படி குற்றம்.

அப்படி பான் கார்டு வைத்திருந்தால் அதனை உடனே வருமானவரித்துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆதார் கார்டு, பான் கார்டு நம்பரை இணைப்பதற்கு கடைசி தேதி கடந்த ஜூன் 30 2023 என்று அறிவிக்கப்பட்டு இருந்ததுடன் இணைக்க விட்டால்.

ஜூலை 1 2023 முதல் பான் கார்டு பயன்படுத்த முடியாது அப்படி பயன்படுத்த முடியாவிட்டால் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் அனுப்புவது முதல் வங்கியில் கடன் வாங்குவது.

வருமான வரி தாக்கல் செய்வது வரை அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்.

ஆனால் அபராதம் செலுத்தி பான் கார்டு, ஆதார் கார்டு, இணைக்க முடியும் கட்டணம் 1,000/- ரூபாய் செலுத்தி நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம்.

ஆதார் நம்பரை தந்த பிறகு ஒரு மாதத்தில் மறுபடியும் உங்கள் பான் கார்டு செயல்பட தொடங்கி விடும்.

அபராத தொகை எவ்வளவு எப்படி கட்ட வேண்டும்

ஒவ்வொருவருக்கும் இந்த பான் கார்டு மிகவும் முக்கியம் ஆனால் யாராக இருந்தாலும் ஒரே ஒரு பான் கார்டு தான் நம் வைத்திருக்கிற அனுமதி உண்டு.

குறிப்பாக 18 வயதிற்கு முன்பு பான் கார்டு தேவைப்படும் அப்போது வழங்கப்படும் பான் கார்டு மைனர் பான் கார்டு (Minor PAN card) என்று அழைக்கப்படும்.

18 வயதிற்கு பின்பு கண்டிப்பாக நீங்கள் பான் கார்டு மாற்றம் செய்திருக்க வேண்டும்,அப்படி செய்யாமல் மறுபடியும் புதிய பான் கார்டு மேஜர் பான் (Major PAN Card) கார்டு வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றம்.

(Major PAN Card) கார்டு வாங்கும்போது (மைனர் பான் கார்டு) வருமான வரித்துறை அலுவலரிடம் கட்டாயம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும்.

ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் பிடிப்பட்டால் வருமானவரித்துறை உங்கள் மீது சட்டப்படி கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் அத்துடன் ரூபாய் 10,000/-அபராதமும் விதிக்கப்படும்.

புதிய மற்றும் பழைய பான் கார்டு

சிலர் திருமணத்திற்கு பிறகு குறிப்பாக பெண்கள் தங்கள் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள்,அதன்பிறகு அது அவர்களின் பான் எண்ணிலும் மாற்றப்பட வேண்டும்.

அப்படி மாற்றாமல் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு பான் கார்டுகள் இருப்பதாகிவிடும்.

இப்படி தெரியாமல் இரண்டு பான் கார்டுகளை சிலர் வைத்திருக்க நேரிடுகிறது,ஒவ்வொருவரும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

மேலும் சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்,எப்படி இருந்தாலும் ஒரே பான் கார்டு வைத்திருக்க மட்டுமே சட்டத்தில் அனுமதி.

சரி ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் அதை எப்படி ஒப்படைப்பது தெரியுமா.

இணையதளம் அல்லது நேரடியாக உங்களுக்கு எது வசதியோ அதை பயன்படுத்தி நீங்கள் ஒப்படைக்கலாம்.

நேரடியாக ஒப்படைப்பது சிறந்தது

உங்களுக்கு இரண்டு பான் கார்டு இருந்தால் அதில் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு மற்றொன்றை நீங்கள் ஒப்படைத்தால் உங்களுக்கு வழங்கப்படும் அபராத தொகை நிறுத்தி வைக்கப்படும்.

குறிப்பாக இதற்குப் 49A படிவம் நிரப்ப வேண்டும் சமர்ப்பிக்க வேண்டிய பண்கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த படிவத்தை உங்கள் அருகில் உள்ள UTI அல்லது NSDL எனப்படும் நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட் லிமிடெட் வசதி மையத்தில் சமர்ப்பித்து விட வேண்டும்.

பிறகு அதற்கான ஒப்புகை ரசிகை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்,உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீடு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.

அதில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் உங்கள் பகுதியில் அதிகார வரம்பு அதிகாரி யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கடிதத்தில் உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதன் உடன் சரணடைய வேண்டிய நகல், பான் கார்டு விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் NSDL நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட் லிமிடெட் எனப்படும் பெறப்பட்ட ஒப்புகை ரசிதையும் நீங்கள் சான்று அளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பிறகு உங்களுக்கு தேவையில்லாத பான் கார்டு ரத்து செய்யப்படும் இதற்கு நீங்கள் எங்கும் அழைய தேவையில்லை நேரடியாக உங்கள் பகுதியில் உள்ள.

வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்றால் அனைத்து செயல்முறைகளையும் அவர்களை செய்து விடுவார்கள்,அதற்கான கட்டணத்தை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

TN rs 1000 திட்ட விண்ணப்ப சரிபார்ப்பு செயல்முறை

MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0