
3 Amendment Bills introduced by Amit Shah 2023
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு ஏமாற்றினால் இனி வரும் காலங்களில் தப்ப முடியாது சட்டத்தை கடுமையாக்கிய மத்திய அரசு..!
திருமணம் செய்து கொள்வதாக, பதவி உயர்வு, வேலை பெற்று கொடுப்பதாக, வெளிநாடு அழைத்து செல்வதாக, பெண்களிடம் ஆசைவார்த்தை தெரிவித்து உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமாக கருதப்படும்.
இது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்,வகையில் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாம் இன்று பின்பற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டங்கள் அதில் காலத்திற்கு ஏற்ப சிறு சிறு திருத்தங்களை மட்டும் நாம் செய்து வருகிறோம்.
ஆனால் இப்பொழுது இந்தியாவில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு மத்திய அரசு அவ்வப்போது சட்ட திருத்தங்கள் செய்து வருகிறது.
இப்பொழுது சில சட்டங்களை திருத்தம் செய்துள்ளது,அதாவது இந்திய தண்டனை சட்டம் (IPC) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPc),இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது.
தற்போது காலத்திற்கு ஏற்ப இந்த மூன்று சட்டங்களுக்கு மாற்றாக புதிய விதிமுறைகளுடன் புதிய பெயரில் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இப்பொழுது நடைபெறுகின்ற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன்படி பாரதிய நாகரிக் சுரக்ஷா, சன்கி மசோதா பாரதிய நாயர், சன்கி மசோதா பாரதியார் சக்சவா மசோதா, உள்ளிட்ட புதிய 3 சட்ட திருத்த மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
குற்றவியல் நிதி முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய மூன்று சட்டங்களில் இந்தியா என்ற பெயர் இந்த நிலையில் தற்போது புதிய சட்டத்தில் பாரதிய என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்
நேற்று மக்களவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புதிய மசோதாக்களை தாக்கல் செய்தார்,அதாவது நான்கு, ஐந்து நபர்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து.
அதாவது கும்பலாக சேர்ந்து கொலை செய்தால், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல்,போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும்.
கூட்டு வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு பாரதிய நியாய சன்ஹீட் மசோதாவில் தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது திருமணம் செய்து கொள்வதாக, வேலை பெற்ற தருவதாக, வெளிநாடு அழைத்து செல்வதாக, ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொள்வது சட்டப்படி கடுமையான குற்றமாக கருதப்படும்.
இது போன்ற குற்றங்களுக்கு குறைந்தபட்ச பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.
சிறிய குற்றங்களுக்கு முதல் முறையாக சமூக சேவை செய்வது தண்டனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.
பொய் வழக்கு என்ற குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக,தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளின் போது வீடியோ எடுப்பது கட்டாயம் என கொண்டுவரப்பட்டுள்ளது.
வீடியோ எடுப்பது விசாரணை செய்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும்,மேலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும் மற்றும் குற்றவாளி எந்தவித சட்டத்தின் அடிப்படையிலும் தப்பிப்பதற்கு வழிவகை செய்யக்கூடாது.
என்ற நோக்கில் வீடியோ எடுக்கப்பட வேண்டும்,ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்படும்.
அதற்கு குறைந்தபட்ச 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த சட்ட திருத்தங்களில் இடம் பெற்றுள்ளன.
இந்த மூன்று மூன்று மசோதாக்கள் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தற்போது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
மாரடைப்பு ஏற்படும் நேரம் என்ன?
Honda CD 110 dream Deluxe specifications