
3 reasons the arrest of Minister Senthil Balaji
ஒரு பவர் கட், ஒரு அட்டாக் கண்கள் சிவந்த அமித் ஷா செந்தில் பாலாஜி கைதுக்கு பின் இத்தனை விஷயங்கள் மறைந்து இருக்கிறதா..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பிறகு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக திமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் திமுகவின் மிக முக்கிய மூத்த அமைச்சர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த பிறகு மிக முக்கிய இரண்டு பதவிகளை பெற்றுள்ள நிலையில்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக திமுகவிலிருந்து வரும் சில மூத்த அமைச்சர்கள் இதனால் கடுமையான அதிருப்தில் உள்ளார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பலமுறை மேலிடத்திற்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது திமுகவின் முக்கிய தலைகளின் ஆதங்கமாக உள்ளது.
இப்பொழுது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அவர்கள் மறைமுகமாக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள், இந்த கைதுக்கு பிறகு பல்வேறு ரகசியங்கள் மறைந்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசியலை அதிர வைத்த சம்பவம் இன்றும் நேற்றும் நடந்து உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர், முன்பு வருமானவரித்துறை சோதனை போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை.
அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில் தான்,சோதனை செய்யப்பட்டது.
ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்தில் சோதனை நடந்தது மற்றும் தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்திலும் சோதனை செய்யப்பட்டது.
இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அவரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்ஏபுரம் அபிராமிபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
5 வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து இருக்கின்றனர்,இந்த சோதனைக்கு காரணம் 3 முக்கிய விஷயங்கள் என்று சொல்லப்படுகிறது.
காரணம் 1:
சமீபத்தில் ஆளுநர் ஆர் என் ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜி குறித்த ரகசிய தகவல்கள் கொடுத்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தார்.
அதேபோல் அண்ணாமலையும் செந்தில் பாலாஜி எதிராக இதேபோல் புகார் கொடுத்தார் இதில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக அண்ணாமலை செய்தியும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு உள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்ந்தால் சரியாக இருக்காது என்று ஆளுநர் கருதியதாக கூறப்படுகிறது.
ஆனால் அமைச்சர் பதிவில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் பேச்சிக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது அமலாக்கத்துறை கைது காரணமாக செந்தில் பாலாஜிக்கும் ஸ்டாலினுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
காரணம் 2:
பெண் அதிகாரி மீது தாக்குதல் எலும்பு முறிவு தகாத வார்த்தை திட்டியது சில நாட்களுக்கு முன்பு கருவூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர், உறவினர்கள்,சகோதரர், வீட்டில் சோதனை நடத்திய போது.
திடீரென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது, அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை தாக்கியது.
பெண் அதிகாரி என்று கூட பார்க்காமல் தகாத வார்த்தையில் ஆபாசமாக பேசியது,அவரை தாக்கி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இது போன்ற செயல்கள் நடந்தது இது கடுமையான ஒரு அதிர்வலையை டெல்லியில் ஏற்படுத்தியது.
இதை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உள்ள அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில்.
திமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர் அதன் பிறகு சில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் எதிராகவும் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழக காவல்துறைக்கு தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என அப்போது தமிழக காவல்துறை ஒரு விளக்கத்தையும் கொடுத்தது.
கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து பாதுகாப்பு கொடுத்தார்கள்.
இதை டெல்லி விரும்பாத நிலையில் தாமதமாக நடத்தப்பட வேண்டிய அமலகத்துறை சோதனை மற்றும் கைது உடனே நடத்தப்பட உள்ளதா.
காரணம் 3:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி பொதுக்கூட்டம் காரணமாக தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்தார்.
அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் தொண்டர்களுக்கு கைகாட்டிக் கொண்டு இருக்கும்போது மின்சாரம் தடை ஏற்பட்டது.
அங்கு சுமார் 15 நிமிடம் மின்சாரம் தடைப்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் உடனடியாக சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது பாஜகவினர் பலரின் முகங்கள் இதனால் சுருங்கியது இப்படி அமித்ஷா வந்த போதை மின்சாரம் தடைப்பட்டது செந்தில் பாலாஜியின் சேட்டை என்று பாஜக கடுமையான கோவத்தில் இருக்கிறதாம்.
இதனால் பாஜக தரப்பு கோபம் அடைந்துள்ளது அமித்ஷாவும் கடுமையான கோபத்துடன் தமிழகத்தில் இருந்து உள்ளார்.
இதை அடுத்து தாமதமாக நடத்தப்பட வேண்டிய அமலக்கத்துறை ஆக்சன் உடனடியாக நடத்தப்படுகிறது.
நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்..!
பான் கார்டில் முகவரியை மாற்றுவது எப்படி
பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது
தாமதமாக தூங்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு