
3 years imprisonment for spreading fake news
இளைஞர்களே கவனம் இனி போலி செய்து பரப்பினால் கடுமையான சட்டம்,புதிய கிரிமினல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன..!
160 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது பாரதியார் ஜனதா கட்சி அந்த மாற்றங்கள் முழுவதும் காணலாம்.
இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றங்களில் நேற்று நடைபெற்றது, நேற்று மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பல்வேறு விதமான சட்டங்களில் திருத்தங்களை செய்தார் மற்றும் பெயர்களையும் மாற்றினார்.
அதில் ஒன்றுதான் போலீசெய்திகளை பரப்புவது,குறிப்பாக போலீசெய்தி பரப்புவது என்பது நம் நாட்டில் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகமாக இருக்கிறது.
மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது போலீசெய்தி, இதன் மூலம் அங்கு கடந்த ஜூன் மாதம் முதல் மிகப்பெரிய வன்முறை நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவில் வரலாற்றில் இதுவரை நிகழாத பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அங்கு அரங்கேறியது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு போலிச்செய்தி பரப்பினால் கடுமையான தண்டனங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த சட்டத்தில் பல்வேறு விதமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
சட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த சில சட்டங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.
புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது,பாரதியா நாகரிக் சுரக்க்ஷா,சன்சங்ஹீதா மசோதா, பாரதியார் சக்ஷாவா மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகள் வரை கடுமையான தண்டனை
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாக்கள் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் முடிவுக்குப் பிறகு நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த முன்மொழியப்பட்ட புது சட்டத்தின் கீழ் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில்.
இணையதளம், சமூக வலைத்தளம், பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, போன்ற இடங்களில் போலீசெய்திகள் அல்லது தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு,சட்டப்பிரிவு 195 கீழ் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டப்பிரிவு 195 (1) D படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக.
தவறான அல்லது பொய்யான தகவல்களை வெளியிடுவது அல்லது பரப்பினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட மூலம் பரிந்துரை
பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் இந்த மசோதாவில் அத்தியாயம் 11 கீழ் இந்த முன்மொழிக்கப்பட்ட சட்டம் இருக்கிறது.
இந்திய தண்டனை சட்டத்தின் 153 பி பிரிவின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுக்கு,எதிராக செயல்படுபவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை கொண்டு வரும்போது பேசி அமித்ஷா.
இந்திய மக்களுக்கு நீதி வழங்குவது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த மூன்று மசோதாக்களை கொண்டு வந்துள்ளோம்.
நாட்டில் அடிமைத்தனம் அனைத்து அறிகுறிகளையும் முழுமையாக நீக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.
அதை தற்போது நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!