
4 persons were hacked to death in Tirupur
திராவிட மாடல் அரசின் ஆட்சியில் எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத அளவிற்கு ஆட்சி நடக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம், கொலை, கொள்ளை, லஞ்சம் ஊழல் என தமிழ்நாடு அரசின் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான அலங்கோலமான ஆட்சி நடைபெற்ற வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது இருக்காது என கனிமொழி,உதயநிதி,திரு மு க ஸ்டாலின் அவர்கள் வாய் கிழிக்க தெரிவித்தார்கள்.
ஆனால் இப்போது நடப்பது அதற்கு நேர்மாறாக இருக்கிறது,தனது நிலத்தில் மது குடிக்க கூடாது என்று தெரிவித்த குடும்பத்தை வெட்டிக்கொன்ற குடிகார கும்பல்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டிற்கு அருகில் மது அருந்துவதை தட்டி கேட்டதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக சீரழிவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் காரணமாக மது என்னும் அரக்கனை முடிவு கட்டுவது சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு என்ற கிராமத்தில் செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில்.
மது அருந்தியதை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த குடிகார கும்பல் செந்தில்குமார் அவரது குடும்பத்தையும் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சராசரியாக வெட்டி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்ற வருகிறது.
எந்த கொம்பனும் குறை கூற முடியாத அளவிற்கு ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என பொய் தெரிவித்தார்.
ஆனால் சென்னையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் போதையில் காவல்துறையினரை தாக்கியது மிகப்பெரிய கொடூரம்.
தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருக்கிறது,வீடு புகுந்து பள்ளி மாணவனை வெட்டும் பள்ளி மாணவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் பிறந்தநாளை கடந்த 1ம் தேதி அவரது சக மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது அருந்தி கொண்டாடியுள்ளார்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் தமது தந்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தாயை தாக்குவதாகவும்.
அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் சென்று புகார் செய்திருக்கிறார்,மதுவால் சமூகத்தில் பல்வேறு விதமான தீங்கு விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.
ஆனால் இப்பொழுது தமிழகத்தில் மது விற்பனையை ஊக்குவிப்பதற்கு பல்வேறு விதமான நடைமுறைகள் செய்யப்படுகிறது,தினம்தோறும் தமிழகத்தில் மதுவால் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Chandrayaan 3 Vikram Lander landed on the Moon 2 time
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023