
40 Percentage higher electricity bill in one year
மின்சார பில்லை பார்த்து கதி கலங்கும் மக்கள் மின்சார வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி என்ன..!
தமிழ்நாட்டில் கடந்த கோடைக்காலத்துடன் இந்தக் கோடைக்காலத்தை ஒப்பிடும்போது மின்சார கட்டண மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த முறை மின்சார கட்டணத்தை அதிகமாக செலுத்துவதால் குடும்ப செலவு உயர்ந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
2022 கோடைகாலத்துடன் 2023 கோடைக்காலத்தை ஒப்பிடும்போது தான் மின்சார கட்டணங்களில் இருந்து வரும் வசூல் சுமார் ஒரே ஆண்டில் 40% அதிகரித்துள்ளதாக.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவ மட்டுமே ஒரே வழி என மின்சார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக மின்சாரம் வாரியத்தில் பெயர் வெளியிடாத ஒரு அதிகாரி வெளியிட்ட செய்தியில் மே 2023 சுமார் 9000 யூனிட்டுகளுக்கு மின் கட்டணம் 1 லட்சம்.
ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் 9000 யூனிட்டுகளுக்கு 60,000 மட்டுமே மின்சாரம் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது.
மேலும் இது தொடர்பாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் மின் கட்டண உயர்வுக்கு பிறகு மாதாந்திர மின்சார பில்களில் அதிகரித்தாலும் இப்போது வந்திருப்பது மிக கடுமையான உயர்வு.
மறைமுகமாக அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்
தற்போதைய நிலையில் பல நுகர்வோர்கள் மின்கட்டணத்தை தங்கள் நகைகளை அடகு வைக்க வேண்டும் அல்லது யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
சிலர் மின்சார கட்டணத்தை கட்ட மாத வருமானத்தில் கணிசமான பகுதியை இழக்க வேண்டும் என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 734 கோடி உடன் ஒப்பிடும்போது மே 2023 மின்சார பில்கள்ளியில் இருந்து மின்சார வாரியத்திற்கு வாசல் 28% அதிகரித்து.
கிட்டத்தட்ட 939 கோடியாக உயர்ந்துள்ளது,ஜூன் மாதத்தில் கோடை காலம் நீடித்த காரணத்தால் மின்சார நுகர்வு கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டண வசூல் ஜூன் 2023 734 கோடியுடன் ஒப்பீடுகளில் கிட்டத்தட்ட 40% அதிகரித்து 1086 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் வாரம் வரை வசூல் 30 சதவீதத்தை கடந்துள்ளது என்றும் மேலும் மின் கட்டண வசூல் உயரம் என்றும் எதிர்பார்க்கலாம்.
மொத்தம் உள்ள 2.41 கோடி வீட்டு இணைப்புகளில் 97 லட்சம் நுகர்வோர்கள் தங்கள் நுகர்வு 100 யூனிட் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை.
நுகர்வு 500 யூனிட்களுக்கு குறைவாக இருந்தால் 101-200 யூனிட்களுக்கு கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 2.25 மானியமாக வழங்கப்படுகிறது.
எனவே மின் கட்டணத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை செலவை குறைப்பது ஒரே வழி என பெயர் வெளியிடாத மின்சார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் இப்பொழுது ஒவ்வொரு குடும்பங்களிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மக்கள் சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பரபரப்பு தொடங்கி உள்ளார்கள்.
மின்சார கட்டணத்திற்கு யார் பொறுப்பு
செந்தில் பாலாஜி போல் அமைச்சரை நியமித்தால் நிச்சயம் அவர் இருக்கும் துறைகளில் கட்டணம் என்பது அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதற்கு எடுத்துக்காட்டாக இதுவரை தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மின்சார கட்டணம் ஒரே முறை 40% உயர்ந்துள்ளது.
விடியல் அரசு என்று அறிவித்த திராவிட மாடல் மக்களின் விளக்கை அணைத்து விட்டது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவின் பெயர் BHARAT என மாற்றப்படலாம்..!