
42 lakh bribe money received by Sub Registrar Sangeeta
கூகுள் பே மூலம் 42 லட்சம் லஞ்சம் தமிழ்நாட்டை அதிர வைத்த சப் ரிஜிஸ்டர் சங்கீதா என்ன நடந்தது எப்படி சிக்கினார்..!
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் துணை சார் பதிவாளராக பணிபுரியும் சங்கீதா Google pay மூலம் 42 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார்.
இதேபோல் அவரது அலுவலகத்தில் நடந்த சோதனைகள் கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட விருத்தாச்சலம் புறவழிச் சாலையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த துணை சார் பதிவாளராக சங்கீதா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார் துணை சார்பதிவாளர் சங்கீதா விருதாச்சலம் பத்திர அலுவலகத்திற்கு புதியதாக வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக ரகசியமாக புகார் வந்தது.
இதன்பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன் திருவேங்கடம் ஆய்வு குழு தலைவர் முருகன் மற்றும் காவல்துறையினர் வியாழக்கிழமை மாலை.
விருதாச்சலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனையில் திடீரென்று ஈடுபட்டார்கள்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒவ்வொரு அறையும் அனைத்து இடங்களிலும் தீவிரமாக காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இரவு வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக நடத்திய சோதனை முடிவில் கணக்கில் வராத ரூபாய் 8 லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ரெஜிஸ்டர் சங்கீதாவின் வங்கி கணக்கு ஆய்வு செய்த காவல்துறைக்கு கடுமையான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் இதுவரை லஞ்சமாக பெற்ற ரூபாய் 42 லட்சத்தை அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து Google pay மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது,சங்கீதா லஞ்ச பணத்தின் மூலம் வீட்டுமனைகள் வாங்கியதும் மற்றும் நிலம் வாங்கியதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் நகைகள் ஆபரண பொருட்கள் வாங்கியதற்கான ரசிதுகளும் காவல்துறையிடம் சிக்கி உள்ளது.
இதன் பிறகு சப் ரிஜிஸ்டர் சங்கீதாவையும் அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் காவல்துறை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவு ஒரு மணி வரை விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் கடலூருக்கு அழைத்து விசாரணை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
சாதாரண ரெஜிஸ்டர் சங்கீதா 42 லட்சம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் எவ்வளவு லஞ்சம் நடமாடுகிறது என்பதற்கு திராவிட மாடல் அரசு ஒரு சிறந்த உதாரணம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Chandrayaan 3 Vikram Lander landed on the Moon 2 time