
5 best investment plan in tamil
உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள்..!
இன்றைய காலகட்டத்தில் நீங்கள் இப்போதிலிருந்து சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே உங்களுடைய எதிர்காலத்திற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே நீங்கள் சேமித்த பணத்தை உங்களுடைய வீட்டில் வைத்தால் கண்டிப்பாக அந்த பணம் வளர்ச்சி அடையாது.
உங்களுடைய பொருளாதாரமும் வளர்ச்சி அடையாது அதனால் சரியான வழியில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அந்த பணத்தின் மதிப்பை மேலும் நீங்கள் அதிகரிக்க முடியும்.
உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய நேரத்தையும் உங்களுடைய பணத்தையும் நீங்கள் எப்படி சரியான வழியில் கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து உங்களுடைய வாழ்க்கை அமையும்.
நீங்கள் ஒரு நபருக்கு பணம் கொடுத்தால் அந்த பணம் திரும்ப கிடைப்பது என்பது மிக கடினம்.
அந்த பணத்தை பெறுவதற்கு நீங்கள் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தாலும் அது நடக்காத காரியமாக இருக்கிறது.
ஏனென்றால் நம்முடைய சட்டம் அந்த அளவிற்கு இருக்கிறது நீங்கள் ஒரு நபருக்கு பணம் கொடுத்து அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்றால்.
நீங்கள் நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொட முடியும் அதற்கு நீங்கள் சரியான ஆதாரத்தை காண்பித்தால் மட்டுமே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.
அதனால் நீங்கள் உங்களுடைய பணத்தை அரசாங்கம் வைத்திருக்கும் சில வழிமுறைகளை பின்பற்றி உங்களுடைய சேமிப்பை அதிகரிக்கலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)
ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பணம் முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையான சிறந்த திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் உங்களுடைய பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு வைக்க வேண்டும்.
முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.
வங்கிகளின் நிலையான வைப்புத் தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் நமது விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
முதிர்வு காலம் முடிந்த பின்னர் நீங்கள் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த வட்டியை நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே மாதம் மாதம் பெறவும் முடியும் அல்லது நல்ல முறையில் காலம் முடிந்தவுடன் வட்டியுடன் அந்த தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
தொடர் வைப்பு (Recurring Deposit)
சாமானிய மக்கள் முதலீடு செய்வதற்கு உதவும் வகையில் இந்த தொடர் வைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாதாமாதம் நீங்கள் ஒரு சிறிய அளவிலான தொகையை நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
நீங்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்து மிகப்பெரிய தொகையை வட்டியுடன் பெறமுடியும்.
இதில் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் என்ற தவணையில் முதலீட்டைத் தொடங்க முடியும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund)
உங்களுக்கு அதிகப்படியான வட்டி கிடைக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும் அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கி ஆகிய இரண்டின் மூலமாகவும் இந்த திட்டத்தில் இணைய முடியும்.
குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் இது ஒரு தொடர் வைப்புத் தொகை திட்டம் என்பதால் உங்களுக்கு முதிர்வு காலம் 15 ஆண்டுகள் இருக்கும்.
15 ஆண்டுகள் முடிந்து நீங்கள் அந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் 5 வருடம் நீட்டித்துக் கொள்ளலாம்.
15 வருட முதலீட்டிற்கு அதற்கான வட்டி கூடுதலாக கிடைக்கும்.
தங்க பத்திரம் முதலீடு (Gold bond investment)
நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் முதலீடு செய்யும் திட்டம் என்றால் இந்த தங்க பத்திரம் முதலீடு தான் ஏனென்றால் இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பானது.
இதில் அதிகப்படியான வட்டியும் கிடைக்கும் இதற்கு வருமானத் துறை 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு என பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
இந்த திட்டம் அஞ்சல் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அல்லது மத்திய நிதி அமைச்சகம் அவ்வப்போது இந்த திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடும்.
நீங்கள் அப்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து அதிகப்படியான தொகையை பெற முடியும்.
ரியல் எஸ்டேட் துறை முதலீடு (Investment in real estate sector)
ரியல் எஸ்டேட் பொருத்தவரைக்கும் அனைவராலும் முதலீடு செய்ய முடியாது ஏனென்றால் அனைவருக்குமே தெரியும் காரணம் அதற்கு அதிகப்படியான முதலீடு தேவை.
அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அழைப்புவிடுத்தார்
ஒருவேளை உங்களிடம் அதிகப்படியான முதலீடு செய்யுமளவிற்கு பொருளாதாரம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு இடத்தை வாங்கி விடுங்கள்.
How to get new 5G sim card and how to change 4 G to 5G
ஏன் அப்படி என்றால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.
அப்பொழுது அந்த நிலத்தை நீங்கள் விற்பனை செய்தால் உங்களுடைய பணம் உங்களுக்கு கிடைக்கும்.