Uncategorized

5 best tips for being skinny in tamil

5 best tips for being skinny in tamil

5 best tips for being skinny in tamil

குண்டாகாமல் எப்பொழுதும் ஒல்லியாகவே ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சில எளிய குறிப்புகள்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கு நீண்ட நாட்கள் கடுமையான தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு சில நேரங்களில் முடிவு கிடைப்பதில்லை. இதற்கு நீண்ட நாள் தொடர் முயற்சியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி அமைந்து வரும்.

ஆரோக்கியமான உடல்நிலை குறியீட்டை பிஎம்ஐ(BMI)  பெறவேண்டும் என்று முடிவு செய்தால் அது எளிதான காரியம் இல்லை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் சில நபர்கள் தங்கள் உடல் பருமனை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள்.

உடற்பயிற்சி செய்வதை திடீரென்று நிறுத்திவிடுகிறார்கள் அதனால் மீண்டும் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து விடுகிறது, எனவே உடல் பருமனை குறைக்க முயற்சியும், தோல்வியும், வெற்றியும், நிறைந்த ஒரு நொடி தூரப்பயணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

5 best tips for being skinny in tamil

இப்பொழுது ஆரோக்கியமாகவும் அதேநேரத்தில் ஒல்லியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அது கேள்விக்குறியே, எனினும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது அவ்வளவு கடினம் இல்லை.

ஆகவே நாம் ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் ஒல்லியாகவும் இருக்க பின்வரும் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.

சீரான உணவு முறைகளைப் பின்பற்றுதல்

மருத்துவர்கள் பரிந்துரை என்னவென்றால் நாம் உண்ணும் உணவில் 50 சதவீத விழுக்காடு ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.

அதற்கு ப்ராக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நாம் தினமும் உண்ணும் உணவு மூலம் தேவையான நார்ச்சத்துக்களை எளிதாக பெற முடியும்.

குறிப்பாக நாம் உண்ணும் உணவில் நான்கில் ஒருபகுதி கார்போஹைட்ரேட்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு முழு தானியங்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5 best tips for being skinny in tamil

இந்த உணவு முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக திருப்தியான மற்றும் ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டெண் பிஎம்ஐ (BMI) பெறமுடியும் அது மட்டுமில்லாமல் நல்ல ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடலில் தக்க வைக்க முடியும்.

முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்கு தற்போது மக்கள் பல்வேறு தரப்பட்ட உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதன் காரணமாக சில மாதங்கள் கழித்து அவர்களுடைய உடல் மெலிந்து விடுகிறது.

எனினும் நாளடைவில் அவர்களின் உடல் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடும் ஏனெனில் இது போன்ற உணவுகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் நீண்ட நாட்கள் ஒல்லியாக அல்லது அழகான உடலை பெற முடியாது.

எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள், சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சமச்சீர் உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

நட்ஸ்களை அதிகமாக சாப்பிடுங்கள்

தின்பண்டங்களாக இருக்கும் வேர்கடலை, பாதாம் பருப்புகள், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகள் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்புகள் உள்ளது.

எனினும் அவற்றை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது, இந்த நட்ஸ்களை தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும் அது மட்டுமில்லாமல் இதயத் தமனிகளில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது குறைக்கப்படும்.

இதனால் இதயத்திற்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள்.

நீங்கள் தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிட்டு வந்தால் அவை உங்கள் உடலுக்கு திருப்தியைக் கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தனிமங்களையும் கொடுக்கும்.

நீங்கள் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் பழக்கமும் தவிர்க்கப்படலாம் இதனால்.

அடிக்கடி உணவுகளை உண்ணுதல்

பொதுவாக உடலில் அதிக அளவு தேவையற்ற ஊளைச் சதைகள் அல்லது கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமில்லாத மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது.

பசி எடுக்கும் பொழுது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது மற்றும் உணவுகளுக்கு இடையில் அதிக இடைவெளி கொடுப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

எலும்பு அடர்த்தியை உறிஞ்சும் கார்போனேட் பானங்கள்.

இதனால் 3-4 மணிநேர இடைவெளிக்குள் சிறிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

இதன் மூலம் அடிக்கடி பசி எடுக்காது மற்றும் சிறிய அளவிலான கலோரிகளை உண்ணலாம் செரிமானமும் சரியாக நடைபெறும்.

பசி எடுக்கும் போது சாப்பிடுங்கள்

உங்களுக்கு பசி எடுக்கும் பொழுது மட்டுமே சாப்பிட வேண்டும். உடல் சோர்வாக இருக்கும் பொழுது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது அல்லது சலிப்புடன் இருக்கும் பொழுது உணவுகளை சாப்பிடக்கூடாது.

How to cure bad breath under your mask in tamil

ஒருவர் பசியாக இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவுகளும் மற்றும் அதிகமாக நிரம்பக் கூடிய உணவுகளும் அவரை ஈர்க்கிறது என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை நீங்கள் மனச்சோர்வு அல்லது சலிப்போடு அல்லது மன அழுத்தத்தோடு அல்லது சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும்பொழுது.

பீட்சா பர்கர்கள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்த குளிர்பானங்கள், அதிக வெப்பத்தில் சமைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், போன்றவை உங்களை ஈர்க்கும்.

இந்த துரித உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இந்த உணவுகளை நீங்கள் தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குறுகிய காலத்தில் உடல் எடை அதிகரித்து விடும்.

what are the reason waking up in the Midnight

எனவே ஆரோக்கியமுடன், ஒல்லியாகவும் இருப்பதற்கு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், இது மட்டுமே ஒரு சரியான வழி.

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0