TECH

யூட்யூபில் வருகிறது புதிய மாற்றம் இனி 500 சப்ஸ்கிரைபர் 500 subscribers on YouTube is enough to make money

500 subscribers on YouTube is enough to make money

500 subscribers on YouTube is enough to make money

யூட்யூபில் வருகிறது புதிய மாற்றம் இனி 500 சப்ஸ்கிரைபர் மற்றும் 3000 மணி நேரம் பார்வை இருந்தால் போதும்.

உங்களுடைய youtube விளம்பரத்திற்கு தகுதி பெற்றுவிடும் புதிய அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது கூகுள் நிறுவனம்.

youtube உலகில் அதிகமாக மக்கள் உலா வரும் (search engine)ல் 2வது இடமாக இருக்கிறது.

youtube மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

தமிழகம், இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளிலும் ஒரு மாதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

இந்த youtube ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அனைத்து விதமான தகவல்களையும் பெற முடியும்.

தற்போது அந்த youtube இல் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை பயன்படுத்தி நீங்களும் பணம் சம்பாதிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது,அதைப்பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

யூடியூபில் புதிய கொள்கை முறை என்ன

யூட்யூபில் நீங்கள் வீடியோ வெளியிடுகிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக பணம் சம்பாதிக்க முடியாது அதற்கு சில விதிமுறைகளை கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக குறைந்தது 1000 சந்தாதாரர்கள் மற்றும் 4000 மணி நேரம் பார்வை நேரம் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களுடைய சேனல் தகுதி பெறும் விளம்பரத்திற்கு.

Tik Tok,Instagram,Facebook,Whatsapp,Share Chat,Snap Chat போன்ற எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் இருக்கிறது,இந்த வலைத்தளங்களால் youtube இருக்கு மிகப்பெரிய ஒரு போட்டி ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிப்பதற்கு கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தனது தரவரிசை கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இப்பொழுது tiktok-க்கு போட்டியாக youtube நிறுவனம் தனது கொள்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது இனிவரும் நாட்களில் புதிதாக சேனல் தொடங்கும் நபர்கள் 500 சந்தாதாரர்கள் மற்றும் 3000 பார்வை நேரம் கடந்தால் போதும் அவர்கள் தகுதி பெற்று விடுவார்கள் வருவாய் ஈட்டுவதற்கு என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.

முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தைவான் மற்றும் தென் கொரியா (USA, UK, Canada, Taiwan and South Korea) போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறது.

இந்தியாவுக்கு எப்பொழுது வரும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

நீங்கள் ஏற்கனவே சேனல் வைத்திருந்தால் நீங்கள் எந்த ஒரு மாற்றமும் செய்ய தேவையில்லை.

youtube நிறுவனமே அனைத்து மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும், உங்களுடைய சேனலுக்கு வருவாய் வரத் தொடங்கி விடும்.

மிக விரைவில் கூகுள் நிறுவனம் தனது தரவரிசை கொள்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் அனைவரும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

short videos

short videos என்றழைக்கப்படும் குறுகிய வீடியோக்களுக்கு இனி வரும் நாட்களில் 10 million views இருந்து 3 million views  குறைத்துள்ளது யூடியூப் நிறுவனம்.

இதனால் குறுகிய வீடியோ வெளியிடும் நபர்களும் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு முதலில் அமெரிக்காவில் அறிவிக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த புதிய தரவரிசை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு.

எங்களுடன் டெலிகிராம் குழு இணைப்பில் சேரவும்

நஷ்டம் ஏற்படாத உணவு தொழில் வகைகள்..!

பான் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி

பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0