
5G Jobs and price some details in tamil
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்..!
இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான 5ஜி தொழில்நுட்ப ஏலம் முடிவடைந்துவிட்டது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மக்கள் பயன்படுத்த நடைமுறைக்கு வந்துவிடும் என்பதும் தெரிந்த விஷயம்.
நான்கு மிகப்பெரிய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில்.
5ஜி தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கொண்டுபோய் சேர்க்கும் வகையில் அந்த நிறுவனங்கள் இப்போது தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை அடுத்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சுமார் 6 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
5ஜி தொழில்நுட்பம் சேவை
உலகின் பல நாடுகளில் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்தியாவில் தற்போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி டேட்டா ஆகிய நான்கு முக்கிய தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது.
என்பதும் ஒரு வாரம் நடைபெற்ற இந்த ஏலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என்பது தெரிந்த விஷயம்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள்
இந்த நிலையில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் அடுத்த கட்டமாக 5ஜி தொழில்நுட்பத்தை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விரைவாக வழங்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதால் இந்தியாவில் அடுத்த காலாண்டில் சுமார் 6 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும்.
குறிப்பாக ஆபரேட்டர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கேபிள் பதிக்கும் நபர்கள், அதிக அளவில் தேவைகள் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள்
2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்திலிருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்திற்கான ஊழியர்களை பணியில் அமர்த்த தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 சதவீத ஊழியர்களும், ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் 65 சதவீத ஊழியர்களும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 75% ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள்
வருகின்ற 2023 ஆம் நிதி ஆண்டில் 5ஜி தொழில்நுட்பம் சார்பாக இந்த துறையில் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தொழில்துறை மதிப்பீடுகள் கூறுகிறது.
ஏலம் முடிந்து வெளியீடு திட்டங்களும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை.
விரைவாக விரிவுபடுத்த தொடங்கியுள்ளதால், வேலைவாய்ப்புகள் கணிசமான அளவில் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணங்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்தப் 5ஜி தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெளிப்படையான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஆனால் சில இணைய தளத்தில் குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாயாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Prime Minister Narendra Modi assets details in tamil
4ஜி சேவைக்கான கட்டணம் கணிசமான அளவில் உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது