
A new twist in the Kallakurichi school girl case
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் திடீர் திருப்பம் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது..!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இப்பொழுது புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது புதிய திருப்பமாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி உயிரிழந்தார்.
பள்ளி நிர்வாகம் அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார் ஆனால் மாணவியின் பெற்றோர்கள் இதை முழுவதும் மறுத்தார்கள்.
மர்ம மரணம்
மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அதைக் கண்டறிய வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் கூறிவருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் தேதி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் இந்த போராட்டம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வன்முறையாக மாறி பள்ளி வளாகத்தில் இருந்த மேசைகள் பேருந்துகள் உள்ளிட்டவற்றை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
பள்ளியில் இருக்கும் அனைத்து பொருட்களையும் தீவைத்துக் கொளுத்தினார்கள் மற்றும் சில பொருட்கள் மாடு உள்ளிட்டவற்றை திருடி சென்றார்கள்.
போராட்டம் கலவரமாக மாறியது
இதையடுத்து அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கலவரம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது .
போராட்டம் நடந்த போது வன்முறையில் ஈடுபட்டது யார் என்பது அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு.
சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அனைத்து நபர்களையும் ஒவ்வொருவரையும் கைது செய்து வருகிறார்கள்.
மேலும் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்ஜாமீன் வழக்கு
அதைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி மற்றும் மூன்று ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உடல் கடந்த 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே மாணவியின் தாயார் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக.
ஆதாரம் வெளியாகியுள்ளது அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் மாணவி தாயாருடன் பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிசிடிவி காட்சியில் இருப்பது யார்
அதில் உயிரிழந்த மாணவி தரப்பில் அவரது தாயார் உள்ளிட்ட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர்.
மாணவி உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என்று மாணவியின் தாயார் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததால்.
5 வருடங்களில் ரூபாய் 4 லட்சம் லாபம் கிடைக்கும்
இந்த சூழலில் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாணவியின் தாயார் பங்கேற்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
முக்கியமாக பார்க்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சக்தி மெட்ரிக் பள்ளியில் இருக்கும் ஆடிட்டோரியத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பக்கம் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் உள்பட 4 பேர் இருக்கிறார்கள்.
Thirumana thadaikalai neekum 5 best kovilgal
மறுபுறம் மாணவியின் தரப்பில் அவரது தாயார் உள்ளிட்ட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர், இந்த வீடியோ முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது இணையதளத்தில்.