செய்திகள்

பாஸ்போர்ட் மோசடி செய்வது மிக கடினம் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள்..!Aadhaar Should be given through DIGILocker to get passport

Aadhaar Should be given through DIGILocker to get passport

Aadhaar Should be given through DIGILocker to get passport

இனிவரும் காலங்களில் பாஸ்போர்ட் மோசடி செய்வது மிக கடினம் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் இதை செய்தால் மட்டுமே உனக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்கும்..!

இனி வரும் காலங்களில் புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை.

டிஜி லாக்கர் (Digi Locker) முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது பல்வேறு மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.

முறைகேடான முறையில் போலி ஆவணங்களை பெறுவதும் தொடர்கதையாகி உள்ளது,வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை ஆவணம் பாஸ்போர்ட்டில் முறைகேடு நடக்கிறது.

இதனை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,இது குறித்து திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களில் சிலவற்றை டிஜி லாக்கர் (DG Locker) முறையில் சமர்ப்பித்து அவற்றை சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார்.

பாஸ்போர்ட் மோசடிகளைத் தடுப்பதற்கு

இதுவரை ஆதார் அட்டை உண்மை மற்றும் நகல்களை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது,ஆனால் அவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.

அதனை தடுக்கும் வகையில் ஆதார் அட்டையை டிஜி லாக்கர் (Digi Locker) முறையில் சமர்ப்பிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இனி அதே முறையில் ஆதார் அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது போல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் சரிபார்த்தல் செயலகம் உள்ளிட்டவற்றுக்கு செலவாகும் நேரத்தை குறைக்கும் வகையில்.

டிஜி லாக்கர் (DG Locker) முறையில் பிறப்புச் சான்று, கல்விச் சான்று, உள்ளிட்ட சில ஆவணங்களை ஆவணப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் நீங்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு செல்லும்போது ஆவணங்களின் உண்மை நகல்களை கொண்டு செல்ல தேவையில்லை என்கிறது மத்திய அரசு.

அதேபோல் இனிவரும் காலங்களில் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு செல்ல தேவையில்லை,அதற்கு மாறாக டிஜிட் லாக்கர் (Digit Locker) முறையில் சரி பார்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த முறையை பொதுமக்கள் இனி கட்டாயம் பயன்படுத்த வேண்டும், என மத்திய அரசு ஒவ்வொரு பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இனி ஒவ்வொரு பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்து இது குறித்த தகவல்கள் வெளிவரும்.

தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பெறுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசுக்கு உளவு துறை மூலம் தகவல்கள் கிடைத்து வருகிறது.

இதனை உடனடியாக தடுக்க மத்திய அரசு பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறைகளில் பல்வேறு வகையான புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to reduce cholesterol level naturally

jio laptop specifications price launching date

Lava Yuva 2 smartphone specifications

Reserve Bank of India has introduced e RUPEE money

Jio laptop specifications price launching date 2023

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
2
Not Sure
0
Silly
0