செய்திகள்

ரேஷன் ஆதார் கார்டு இணைப்பு ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு Aadhar ration card link last date 2023

Aadhar ration card link last date 2023

Aadhar ration card link last date 2023

ரேஷன் ஆதார் கார்டு இணைப்பு ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு வீட்டிலேயே இணைத்துக் கொள்ளலாம்..!

ஆதார் மற்றும் ரேஷன் கார்டினை இணைப்பதற்கு மத்திய அரசு வழங்கியிருந்த காலஅவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான செயல்முறைகளை எவ்வாறு வீட்டில் செய்யலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் ஆதார் அட்டையுடன் அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டையுடன் பான்கார்டு, ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை உடன் அனைத்து விதமான அட்டைகளையும் இணைப்பதால் போலியான பான் கார்டு, போலியான ஓட்டுநர் உரிமம்.

போலியான வாக்காளர் அடையாள அட்டை, போலியான ரேஷன் கார்டு, உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும்.

இதனால் இதில் சலுகைகளை தவறுதலாக பெற்று வந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,இதன் மூலம் அரசுக்கு சேமிப்பு ஏற்படும்.

ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரே நாடு ஒரே கொள்கை என்ற கோட்பாட்டை மக்களிடத்தில் அடிக்கடி தெளிவுபடுத்தி வருகிறது.

அந்த வகையில் உங்களுடைய குடும்ப அட்டையை வைத்து நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த விதமான மாநிலத்திலும் உணவு தானியங்களை பெற முடியும்.

இதற்கு மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகச்சிறந்த திட்டமாக இருக்கிறது,ஏனெனில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தியாவசிய தேவையான உணவு தானியங்களை ரேஷன் கடையில் பெறுவதன் மூலம் இவர்களுக்கான பணம் சேமிக்கப்படும் என்று மத்திய அரசு நம்புகிறது.

ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு எப்படி

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வித சலுகைகளும் மக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் தான் வழங்கப்படுகிறது.

ஆனால் ரேஷன் கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெற்று அதன் மூலம் முறைகேடுகளில் சிலர் ஈடுபடுவது கண்டறியப்பட்டது.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட்டு உள்ளது.

இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் ரேஷன் கார்டு பெறுவது தடுக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கும்.

ஆதார் ரேஷன் கார்டு இணைப்பது எப்படி

முதலில் https://tnpds.gov.in/என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

ஆதார் ரேஷன் கார்டு மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை அதில் உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு தொடரும் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்கள் தொலைபேசி எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்

இதனை பதிவிட்டு ரேஷன் கார்டு இணைக்கவும் என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்கள் குடும்ப அட்டை ஆதார் கார்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டது.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை வைத்திருந்தால் நிச்சயம் இதில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

How to get Lost school college certificate

இ-சேவை மையம் தொடங்குவதற்கு வாய்ப்புகள்

பட்டா சிட்டா என்றால் என்ன?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is your reaction?

Excited
1
Happy
4
In Love
2
Not Sure
1
Silly
1