
Aavin milk has been hiked by Rs 12 per litre
ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு ஏழை எளிய மக்கள் இனி வாங்க முடியாத சூழ்நிலை..!
இந்த விடியாத நிர்வாக திறமையற்ற அரசுக்கு ஓட்டுப்போட்டு தமிழக மக்கள் இப்பொழுது எப்பொழுது சரியான தீர்வு கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் மாதம் மாதம் ஒவ்வொரு துறையிலும் விலை உயர்வு அது மட்டும் இல்லாமல் உலக வங்கி பல்வேறு நிதி நிறுவனங்களிலும் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள்.
ஒரு பக்கம் விலை ஏற்றம் மற்றொரு பக்கம் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள் ஆனால் மக்களுக்கு எந்த ஒரு திட்டமும் செய்யவில்லை என்னதான் செய்கிறார்கள் அவ்வளவு பணத்தையும்.
தமிழக வரலாற்றில் இப்பொழுது நடக்கும் நிர்வாக திறமையற்ற ஊழல் ஆட்சி போல் இதுவரை எந்த ஒரு ஆட்சியும் நடைபெற்றது இல்லை.
என மக்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது இத்தனைக்கும் குறிப்பாக இன்னும் இரண்டு வருடங்கள் முழுமையாக நிறைவு பெறாத சூழ்நிலையில்.
திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் அதுமட்டுமில்லாமல் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலும் சீர்கெட்டு விட்டது.
பட்டபகலில் தமிழக தலைநகரில் எளிமையாக கொலை செய்கிறார்கள் அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
போதை மாத்திரைகள், போதை பொருட்கள், கஞ்சா பொருட்கள், எளிமையாக தமிழகத்தில் உலா வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர்ந்து கிராமங்களில் நாள்தோறும் நடைபெறுகிறது.
ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு
இன்று ஆவின் பால் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் என்ற அளவில் கடுமையான விலை ஏற்றம் ஏழை எளிய மக்களை பாதித்துள்ளது.
ஆவின் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் அரசு உயர்த்தியுள்ளது கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 24 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதேபோல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேநேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இல்லை லிட்டர் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆவின் பால் சில்லரை விற்பனை விலை இன்று முதல் கடுமையாக உயர்ந்துள்ளது.
திடீரென்று விலை உயர்த்தப்பட்ட ஆவின் பால்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு,குடிநீர் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, மது விற்பனை உயர்வு.
பால் விற்பனை உயர்வு என அனைத்து துறைகளிலும் நாள்தோறும் விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இரண்டாவது முறையாக திமுக ஆட்சியில் ஆவின் பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பிய பக்கமெல்லாம் விலை உயர்வு ஆனால் மக்களுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லை சரியான வருமானம் இல்லாத சூழ்நிலையிலும்.
ஸ்டீராய்டு மாத்திரை என்றால் என்ன
தன் குடும்பம் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக அரசு விலை உயர்வை தினந்தோறும் உயர்த்தி வருகிறது.
மாதந்தோறும் ஒவ்வொரு துறையிலும் விலை உயர்வு அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
Car explosion in Covi and raids across Tamil Nadu
கூடிய விரைவில் இரண்டாவது முறையாக மதுபானங்களின் விலை உயரும் அறிவிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும்.
அதற்கான முழு பணியும் மறைமுகமாக நடைபெற்று விட்டதாக அரசு வட்டாரங்களிலிருந்து ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது.