
Aavin Milk products price hike new update
அதிரடியாக ரூபாய் 100 வரை அதிகரித்த ஆவின் பால் பொருட்கள் விலை அதிரடி முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி இனி ஆவின் பொருட்களை வாங்குவது என்பது..!
ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே காய்கறிகள், மின்சாரம் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த திமுக ஆட்சியில் முக்கியமான ஒரு சாதனை என்னவென்றால் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தான்.
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொற்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு.
30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் பால் தவிர மோர், தயிர், வெண்ணெய், பன்னீர் யோகா, பாதாம் பவுடர்,மிக்ஸ் பவுடர், ஐஸ்கிரீம்கள்.
சாக்லேட்கள், குலோப் ஜாமுன், பால்கோவா, பால் பேடா, மைசூர் பாக், ரசகுல்லா, மில்க் ஷேக், போன்ற பல வகையான பால் சார்ந்த பொருட்களும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவினில் விற்கப்படும் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் திடீரென்று அதிரடியாக உயர்த்தியுள்ளது.
அதன்படி ஆவின் விற்பனை நிலையங்களில் இந்த பொருட்கள் மீதான விலை ரூபாய் 20 முதல் 100 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பன்னீர் ஒரு கிலோ விலை ரூபாய் 450 என இதுவரை விற்கப்பட்ட வந்த நிலையில் தற்போது ரூபாய் 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர் அரை கிலோ விலை ரூபாய் 250 இல் இருந்து ரூபாய் 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர் 200 கிராம் விலை ரூபாய் 100லிருந்து ரூபாய் 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில்.
தற்போது பால் பொருட்களின் விலையும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்டு அத்தியாவசியமான காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில்.
பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது சாமானிய மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்
இந்த ஜூலை மாதம் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார கட்டணம் என்பது அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி மின்சார கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது அனைத்து துறைகளிலும் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அரிசி விலை, மின்சார கட்டணம், பால் பொருட்களின் விலை, வெங்காயம், தக்காளி, போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பது கடுமையாக இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த திராவிட மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
indian govt insurance scheme in tamil
Kisan Vikas Patra scheme details 2023
tn rs 1000 rupees scheme need 6 documents