
Actor Vijay is launching a new party in December
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் டிசம்பரில் அரசியலுக்கு வருகிறார் முதல்வர் ஸ்டாலினுக்கு செக் வைக்கும் வகையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார் என முக்கிய தகவல்கள் இப்பொழுது கசிந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பல காலமாக பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது.
இப்பொழுது உண்மையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது ஏனென்றால் அவரின் செயல்பாடு இப்பொழுது அப்படி அமைந்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இணையதளத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் மாநிலம் முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதோடு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் அவர்கள் சார்ந்த கட்சிகள்.
அவர்கள் பெற்ற ஓட்டுகள் தொகுதியில் 10 முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்பதற்கான மறைமுகமான ஒரு அறிகுறி.
இதற்கு இடையே தான் வருகின்ற 17ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக.
விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவும் நடிகர் விஜய் அரசியல் வருவதற்கான நேரடியான ஒரு தகவல் என அரசியல் வல்லுநர்கள்,சில அரசியல் கட்சி முக்கிய புள்ளிகள் நேரடியாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே தான் நடிகர் விஜய் டிசம்பரில் அரசியலுக்கு வருகிறார் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என அதிமுக பிரமுகர். ஒருவர் கூறியுள்ளார்.
தந்தி டிவியில் நடந்த விவாதத்தில் அதிமுகவை சேர்ந்தவரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான மணிகண்டன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணிகளுக்கும் ஹார்ட்ரிக் என்பது அபூர்வத்தில் அபூர்வம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று.
காங்கிரஸ் ஆட்சி தோல்வி அடையும் அந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழப்பதோடு பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற உள்ளது.
நெறியாளர் குறிப்பிட்டு எந்த இளைய தளபதி என்று கேள்வி முன் வைக்க மணிகண்டன் இளைய தளபதி விஜய் எனக் கூறினார், இதன்மூலம் மணிகண்டன் நடிகர் விஜய் டிசம்பர் மாதம் அரசியலுக்கு வரப்போகிறார்.
அவர் அதிமுக கூட்டணி ஆதரவாக செயல்பட உள்ளார் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.
இது தற்போது இணையதளத்தில் கடுமையான ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் விஜய் மோதல்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய்க்கு இடையே மோதல் கடுமையாக உள்ளது.
நடிகர் விஜய் இதைப்பற்றி வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார்.
ஏனென்றால் அனைத்து படங்களையும் உதயநிதி ஸ்டாலின் வாங்கி விடுகிறார், அவர் சொல்லுவது மட்டுமே சினிமா துறையில் நடைபெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதிமுக ஆட்சியில் சினிமாத்துறை
யார் வேண்டுமானாலும் படம் வாங்கிக் கொள்ளலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம், அரசு தலையிடுவது கிடையாது மற்றும் அரசு சார்ந்த முக்கிய புள்ளிகள், வாரிசுகள், சினிமா துறையில் தலையிடுவதில்லை.
இதனால் சினிமாத்துறை கடந்த 10 ஆண்டுகளாகவே சுதந்திரமாக இருந்தது, ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் வைத்தது மட்டுமே சினிமா துறையில் சட்டம் என்ற போக்கு நிகழ்ந்து வருகிறது.
இதற்கு நடிகர் விஜய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார், உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதை ஒரு குறிக்கோளாக விஜய் தற்போது நிர்ணயித்து உள்ளார்.
இதனால் விஜய் நேரடியாகவே அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
Related Posts :
பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு குறைகிறது
வக்ர சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள்