
Again the ED checks against Senthil Balaji
மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மூன்று மாதங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி நடந்தது என்ன முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது..!
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில்.
மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்புடைய முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை வரும் 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை திடீரென்று இன்று சோதனை நடத்தி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் ஒருவரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது,செந்தில் பாலாஜி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய அனைத்து வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
திருச்சி,கோவை,நாமக்கல்,கரூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது,ஏற்கனவே மூன்று முறை சோதனை நடந்த நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி செய்த ஊழல் மற்றும் பணப் பரிமாற்றம் என அனைத்திற்கும் முக்கியமான சில ஆதாரங்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அமலாக்கத்துறை இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்ற ஒரு முடிவில் இருக்கிறது.
முக்கியமாக செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அவ்வப்போது வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகிறது.
தற்போது வருகின்ற 15ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் அமலாகத்துறை சோதனை செய்வது செந்தில் பாலாஜி தரப்புக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,இது செந்தில் பாலாஜிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000 ரூபாய் திட்டத்திற்கான தகுதி பட்டியல் தயார்..!
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்து விட்டதா..!