
Agni Natchathirathil enna seiyalam 2022
அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது..!
கோடைக் காலம் தொடங்கியவுடன் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிடும், இந்த அக்னி நட்சத்திரம் நடக்கும் காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள்.
தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர யோசிப்பார்கள் ஏனெனில் அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெயிலின் தாக்கம் தற்போது மாறிவிட்டது, உலக வெப்பமயமாதல் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் வருகின்ற மே மாதம் 4ம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த அக்னி நட்சத்திர பலருக்கும் எந்த காரியங்களை செய்யலாம் செய்யக்கூடாது என்று குழப்பத்தில் இருப்பார்கள்.
உங்களின் குழப்பத்திற்கு விடை கொடுக்கும் விதமாக இந்த பதிவில் அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன
பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் தினத்தை தான் அக்னி நட்சத்திரம் என்கிறோம்.
25 நாட்கள் அக்னி நட்சத்திரம் இருக்கும், இந்த காலகட்டத்தில் மற்ற நாட்களைவிட, இந்த நாட்களில் சூரியனின் வெப்பம் அதிக அளவு பூமியில் விழும்.
வடகிழக்கு பருவமழை காலத்திற்கும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும், இடைப்பட்ட காலமாகும் மேலும் இந்த காலத்தை கத்தரி வெயில் என்று அழைப்பதும் உண்டு.
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் வருகின்ற மே மாதம் 4ம் தேதி 05.55 AM தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்
நமது முன்னோர்கள் வகுத்துள்ள சில செயல்முறைகள் படி அக்னி நட்சத்திரத்தில் சில விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும்.
திருமணம் நிச்சயதார்த்தம், திருமண பொருத்தம் போன்றவை செய்யலாம்.
பூணூல் போடுதல், ஒப்புதல் தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, யாகங்கள், போன்ற சுபக் காரியங்கள் செய்யலாம்.
திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்வு, வளைகாப்பு, சத்திரங்கள் கட்டுதல், வாடகைக்கு வீடு விடுதல், குடியேறுவது, போன்றவற்றை செய்யலாம்.
சுபகாரியங்கள் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மட்டும் அதற்கான சில முயற்சிகளை மட்டும் அக்னி நட்சத்திரத்தில் செய்யலாம்.
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை என்ன
செடி, கொடி மற்றும் மரங்களை வெட்டவோ, எரிக்கவோ கூடாது, ஏனெனில் இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
மரங்கள் இருந்தால்தான் வெயிலின் தாக்கம் குறைக்க முடியும் மற்றும் நிழல் கிடைக்கும்.
விதைகள் விதைக்க கூட, கிணறு, குளம்,நர் உரிக்க கூடாது, போன்றவற்றை செய்யக்கூடாது, இதை நீங்கள் வெயில்காலத்தில் செய்தாலும் அதற்கான சரியான பலன் கிடைக்காது.
நிலம் மற்றும் வீடுகளை பராமரிக்கக் கூடாது, மொட்டையடித்தல், காதுகுத்துதல், வீடு கிரகபிரவேசம், வீடு கட்டுவதற்கு பூஜை செய்தல், போன்றவற்றை செய்யக்கூடாது.
புது வீடு குடி போவது, கிணறு வெட்டுவது, பூமி பூஜை செய்வது, நிலம் வாங்குவது, புதிதாக தொழில் தொடங்குவது, போன்ற எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.
மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள்
புதிதாக வாகனம் வாங்க கூடாது, கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு சரியான நல்ல நாட்கள் இல்லை.
முடிந்தவரை இந்த அக்னி நட்சத்திரத்தில் நெடுந்தூர பயணத்தை தவிர்த்து விடுங்கள்.
what are the symptoms in gas trouble in tamil
இந்த அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன், அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.