
AIADMK announces no alliance with BJP 2024
அதிமுக பாஜக கூட்டணிக்குள் என தான் நடக்கிறது பாஜகவுடன் தற்போதைய நிலையில் கூட்டணி இல்லை என்று அதிமுக வெளிப்படையாக அறிவித்துவிட்டது.
இதை திமுக தரப்பு உன்னிப்பாக கவனித்துவருகிறது மிகப் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த பல மாதங்கள் சென்றுள்ள நிலையில்.
இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,கடந்த சில மாதங்களாகவே அதிமுக பாஜக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வார்த்தை போர் மிக அதிகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முக்கியமான தலைவர்களை பற்றி ஆபாசமாகவும் அவதூறுவாகவும் பேசுவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய ஒரு தலைவலி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக நேரடியாகவே பாஜகவை எதிர்த்து வருகிறது அதிமுக அவ்வப்போது மறைமுகமாக பாஜகவை எதிர்த்து வந்தாலும் தற்போது கூட்டணி இல்லை என்று நேரடியான ஒரு முடிவை வெளியிட்டுள்ளது.
ஏனென்றால் அறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விதம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மிகப்பெரிய கட்சியை உருவாக்கியவர் அவர் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
அதாவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக திகழ்ந்தவர் அறிஞர் அண்ணாவை அனைவரும் மதிக்க கூடிய தலைவராக வணங்குகிறார்கள்.
அறிஞர் அண்ணா என்றால் தமிழ்நாட்டில் இன்றும் மரியாதை அந்த அளவிற்கு இருக்கும் அதுபோன்ற மிகப்பெரிய தலைவரை கொச்சைப்படுத்தி பேசிய விதம் திமுக அதிமுக இரண்டு கட்சிக்கும் பிடிக்கவில்லை.
இதனால் அதிமுக கட்சியின் சிவி சண்முகம்,செல்லூர் ராஜ், ஜெயக்குமார்,உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் பார்வைக்கு எடுத்து சென்றார்கள்.
உச்சக்கட்ட கோபம் அடைந்த எடப்பாடி கே பழனிசாமி அண்ணாமலையை நேரடியாக தாக்குங்கள் கூட்டணி வேண்டாம் என்ற முடிவை வெளியிடுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம்.
இதனால் எடப்பாடி கே பழனிசாமியின் பேச்சை கேட்டு ஜெயக்குமார் இன்று பாஜகவுடன் தற்போதைய நிலையில் கூட்டணி இல்லை கூட்டணி என்றால் மாநில கட்சி தலைவரை பாஜக மேலிட மாற்ற வேண்டும்.
அப்போதுதான் கூட்டணி தேர்தல் களத்தில் முடிவு எடுப்போம் ஆனால் இன்றைய காலகட்டங்களில் பாஜகவுடன் கூட்டணி இல்லை.
வரும் காலங்களில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்