
AIADMK general committee case Madras High Court
அதிமுக பொதுக்குழு வழக்கு தேதி குறிப்பிடாமல் வழக்கின் இறுதி தீர்ப்பு ஒத்திவைப்பு..!
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின்.
இறுதி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடிபழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிஎஸ் வைத்தியநாதன்,சுந்தர், மற்றும் விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்கள்.
குறிப்பாக ஜூலை 11 பொது குழுவுக்கு ஜூலை 1-இல் நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்ட வில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தார்கள்.
தொண்டர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப
கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறி அதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை எனவும் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை.
2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்காள என தனி நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார், கற்பனை அடிப்படையிலானது என்றும் குறிப்பிட்டனர்.
ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தீர்ப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில்.
அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டினார்.
கட்சி விவரங்களை பொருத்தவரை பொதுக்குழுவுக்கு அதிக உரிமம் மற்றும் அதிகாரம் உள்ளது என்றும்.
பொதுக்குழுவில் முடிவு இறுதியானது என்றும் அடிப்படை தொண்டர்களின் கருத்துகளை பெறவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு என்றும் சுட்டிக் காட்டினார்கள்.
கட்சியின் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பு எழுதி அதை சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள்.
இருவரும் ஒன்றாக செயல்பட முடியாது எனவும் தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் முழுவதும் முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஓபிஎஸ் எதற்கு வழக்கு தொடுத்தார்
தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார் 1.5 கோடி உறுப்பினர்களின் நன்மை மற்றும் உரிமைக்காக இல்லை எனவும் சுட்டிக் காட்டினார்கள்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு, கூட்டத்தை நடத்த கூடாது என்று தனி நீதிபதி உத்தரவு.
கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் இது தீர்ப்பு முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.
உள்கட்சி விவரங்களில் தலையிடக்கூடாது
உள்கட்சி விவரங்களில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும் தனி நீதிபதியின் உத்தரவை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்கள்.
தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன்.
அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்கள் மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி வாதத்தை ஏற்க முடியாது என்றும்.
அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும்.
இது சம்பந்தமான விதியைக் கொண்டு வருவதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
பொதுக்குழுவில் என்ன நடந்தது
ஜூன் 23 இல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால் இரு பதவிகளும் காலாவதி ஆகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23 க்கு முந்திய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
மா இலையின் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
மேலும் தலைமை கழகத்தின் பெயரில்தான் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்படபட்டதே தவிர ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் அல்ல எனவும் கட்சி விதிகளின்படி.
Free Smartphone and internet for housewives
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூன் 11 கூட்டத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது எனவும் வாதிட்டார்கள்.
வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்கள், இன்னும் ஒரு வாரத்தில் இதற்கு தீர்ப்பு வந்துவிடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.