Uncategorized

AIADMK’s case is listed in the Supreme Court

AIADMK's case is listed in the Supreme Court

AIADMK’s case is listed in the Supreme Court

நெருங்கும் கிளைமாக்ஸ் ஓபிஎஸ் இபிஎஸ் தேதி குறித்த உச்ச நீதிமன்றம் விடை கிடைக்குமா வெள்ளிக்கிழமை..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின்.

இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த.

மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை வருகின்ற 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என தகவல்கள் இப்பொழுது கசிந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் புதிய இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்.

ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் இதனால் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ள நிலையில்.

கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க மறுபடியும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அமர்வு தீர்ப்பளித்த நிலையில்.

அப்பொழுது ஓபிஎஸ் தரப்பு மிகவும் உற்சாகம் அடைந்தார்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடிபழனிசாமி மேல்முறையீடு செய்து.

அந்த தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்தார்கள்.

இருந்தும் விடாத ஓ பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பினை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்திருக்கிறார்.

எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்த வழக்கு

அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததால் தங்கள் தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்க வேண்டும் என.

பழனிசாமி தரப்பினர் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார்கள் தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்தது

இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்து பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கப்படும் அதனால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது என்று பார்க்கப்படுகிறது.

இதேபோல அதிமுக பொதுக் குழு உறுப்பினரான வைரமுத்து என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

எப்பொழுது முழுமையான விடை தெரியும்

இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடிபழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில்.

உங்களுடைய சிறுநீரகம் ஆபத்தான நிலையில் உள்ளதை காட்டும் சில அறிகுறிகள்..!

வெள்ளிக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணையின்போது அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளதாக அதிமுகவிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வழக்கு தொடர்வதற்கு தகுதியற்றவர் என வாதத்தை எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் நிச்சயம் முன்வைக்கக் கூடும்.

HIgh emergency situation in tamilnadu 2022

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கேள்விகள் அனைத்திற்கும் வெள்ளிக்கிழமை விடை கிடைத்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0