
AIAMK Party update news in tamil 2022
இது பட்டியலில் இல்லை எடப்பாடியை அதிமுகவிலிருந்து நீக்கிய பன்னீர்செல்வம் அங்கே 18 இங்கே 22 என்னதான் நடக்கிறது..!
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், உள்ளிட்ட 18 நபர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கிய நிலையில்.
எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட 22 நபர்களை நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த முட்டுக்கட்டைகள் வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவினரின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது.
ஒரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டார்கள்.
மறுபக்கம் பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
ஓ பன்னீர்செல்வம் தகுதி நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபகர், மனோஜ் பாண்டியன், ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
18 நபர்கள் தகுதி நீக்கம்
இந்த நிலையில் மேலும் 18 நபர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதில் ஓ பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி என் பி வெங்கட்ராமன்.
ஆர் ராமச்சந்திரன், எம்ஜிஎம் சுப்பிரமணியன், ஓம்சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்பிகள் கோபால கிருஷ்ணன், உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் பதிலடி என்ன
அதேபோல் மருது அழகுராஜ், வினு பாலன்,லட்சுமி, சைதை எம்எம் பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன், ஆகிய நபர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய ஆதரவாளர்களாக இருக்கும்.
அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 22 நபர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யார் அந்த 22 நபர்கள்
செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், கோகுல இந்திரா,வளர்மதி, ஆர் பி உதயகுமார்.
சிவி சண்முகம், எஸ் மணியன், செல்லூர் ராஜ், திநகர் சந்தியா,அசோகன், கந்தன், இளங்கோவன், ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன்செல்லப்பா, அவர்களை நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 370 விளக்கம்..!
அதிமுகவில் இப்பொழுது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி ஆகிய இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
4 lakh for goat farming Central Government best scheme
அதுமட்டுமில்லாமல் திருமதி சசிகலா அவர்கள் கட்சியையும் அதிமுக அலுவலகத்தையும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால் இந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன் வசம் வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் அடிப்படைத் தொண்டர்கள், என அனைவரும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விரும்புகிறார்கள்.