
Ajith Kumar Launches ak moto ride touring company
நடிகர் அஜித் துவங்கிய AK Moto Ride புதிய நிறுவனம் இதுல என்ன சர்வீஸ் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..!
நடிகர் அஜித்குமார் மோட்டார்ஸ் சைக்கிள் டூரிங் நிறுவனத்தை தற்போது துவக்கியுள்ளார் அவரது தனிப்பட்ட ஆர்வத்தை தொழிலாக மாற்றும் முயற்சியாகவே இதனை மேற்கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனம் என்றால் என்ன? அதனை எப்படி பயன்படுத்த முடியும்.
அதில் இணைவது எப்படி, அதில் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது, போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணியான நடிகர்களின் ஒருவர் இவர் தனக்கென மிகப் பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தையே தமிழகத்தில் வைத்துள்ளார்.
இவரது திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெறும்.
என்னதான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்,இவருக்கு பிடித்தது கார்,பைக்,துப்பாக்கி சுடுதல், போன்றவை தான்.
இவர் சினிமா சூட்டிங் போக மீதம் இருக்கும் நேரங்களில் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இந்தியா மற்றும் உலகில் உள்ள பல நாடுகளுக்கு ரைட்டிங் செல்வார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பை பெறும்.
இந்த நிலையில் இவர் அடுத்த வெளியாக உள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் 2 சக்கர வாகனம் மூலம் சுற்றுலா செல்ல உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
தற்போது அதற்கான பணிகள் நடந்து வரும் சூழ்நிலையில், தற்போது அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரர் நடிகர் அஜித்குமார் பற்றி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் நடிகர் அஜித்குமார் AK Moto Ride என்ற பெயரில் ஒரு புதிய மோட்டார் சைக்கிள் டூரில் நிறுவனத்தை துவங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாகச ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச சாலைகளிலும் ரைடிங் செய்ய சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது அதாவது மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனம் என்றால் என்ன?
இந்த நிறுவனம் என்ன மாதிரியான சேவைகளை வழங்கும் என புரியாமல் பலர் குழம்பி வருகிறார்கள்.
இது வேறு ஒன்றும் இல்லை நடிகர் அஜித்குமார் இத்தனை ஆண்டுகளாக அவ்வப்போது டூர் போகிறார் அல்லது அதே போல் நீங்களும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்த நிறுவனம் உங்களுக்கு முழுமையாக உதவும்.
இந்தியா மட்டும் இல்லாமல் உலகில் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளின் மூலம் பயணிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதால் லட்சக்கணக்கான நபர்கள் இதற்கு ஆர்வம் செலுத்துகிறார்கள்.
இந்தியாவில் குறிப்பாக மோட்டார் சைக்கிளிங் செல்ல வேண்டும் என்றால் அதிகமாக இளைஞர்கள் விரும்புவது லடாக் போல உயரமான பகுதிகளுக்கு.
அங்கு மோட்டார் சைக்கிளின் பயணம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் சொந்தமாக ஒரு சூப்பர் பைக் வாங்க வேண்டும்.
இப்படியான பயணத்திற்கு வெளிநாடுகளுக்கு இந்த பைக்கை கொண்டு செல்ல அனுமதி வாங்க வேண்டும் அங்கு ரைடு செல்லும்போது வரும் சிக்கல்களையும் தீர்ப்பது என பல பிரச்சனைகள் இருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில் தான் நடிகர் அஜித்குமாரின் இந்த நிறுவனம் செயல்பட உள்ளதாக இது குறித்து அந்த அறிக்கையில் சில குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரைட் பேக் குறித்த சில தகவல்கள்
இந்த அறிக்கையின் படி அஜித்குமாரின் புதிய நிறுவனம் அட்வென்சர், டூரிங் சூப்பர் பைக்குகளை செல்ல விருப்பம் உள்ள நபர்களுக்கு வழங்குகிறது.
இந்த நிறுவனம் மூலம் ரைடு செய்பவர்களுக்கு பாதுகாப்பையும் சொகுசு வசதியையும் வழங்க உள்ளது.
ரைட் செல்லும்போது உடன் அனுபவம் மிக்க கைடுகள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக வெளிநாடுகள் அல்லது வேறு மாநிலங்களுக்கு பயணிக்கும் போது அங்கு மொழி மற்றும் அந்த மக்களின் கலாச்சாரம் வேறுபடும் என்பதால்.
இதையெல்லாம் நன்றாக புரிந்த ஒருவரும் வழிகாட்டியாக இந்த பைக் ரைடில் செல்லும் நபர்களுடன் கூட வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக அஜித்குமாரின் நிறுவனம் ரைடு செய்பவர்களுக்கு ஆரம்ப முதல் இறுதி வரை தேவையான உதவிகளை இந்த நிறுவனம் செய்து கொடுக்க உள்ளது.
இந்திய கடற்படையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு
இதுதான் ஒரு மோட்டார் சைக்கிள் டூரிஸ்ட் நிறுவனத்தின் வேலை இப்படி சேவை வழங்கும் நிறுவனம் சிலர் பேக்கேஜ்களை வைத்திருப்பார்கள்.
வகை 2 நீரிழிவு நோய்க்கான காரணங்கள் Type 2 Diabetes symptoms in tamil
நடிகர் அஜித்குமாரின் AK Moto Ride நிறுவனத்தின் டூர் பேக் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இதில் எப்படி ரைடுக்கு பதிவு செய்வது,ஒரு ரைடுக்கு எவ்வளவு செலவாகும்.
எந்தெந்த நாடுகள் மற்றும் ஊர்களில் ரைடுக்கு சர்வீஸ்களை இந்த நிறுவனம் வழங்குகிறது,உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.