
Allowed for procession of RSS organization
கலவரத்தைத் தூண்டக் கூடாது கத்தி கம்போடு செல்லக்கூடாது தமிழ்நாடு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு..!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த.
அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 51 ஒரு இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி.
தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு அம்பேத்கரின் பிறந்த தினம் நூற்றாண்டு விஜயதசமியை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போலீசார் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை அதேசமயம் அனுமதி தரமுடியாது என்றும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
அவர்களின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி.
சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன், உள்ளிட்ட 9 நபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.
அந்த மனுவில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் சீருடையுடன் பேண்ட் வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல.
தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது இதே சட்ட விதி மீறல் என்று தெரிவிக்கப்பட்டது.
என்ன கோரிக்கை வைக்கப்பட்டது
அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே காவல் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜிகே இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது.
காவல்துறை சார்பில் எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல் அளிக்கவில்லை ஊர்வலத்தின்போது கோஷங்களை எழுப்பக்கூடாது.
காயம் ஏற்படுத்தும் வகையில் எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லை அவர்கள் செல்லும் வழியை குறிப்பிட வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும்
அணிவகுப்பு குறித்து முழுமையான தகவல்களை அவர்கள் குறிப்பிடாத காரணத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.
சட்டம் ஒழுங்கு மத நல்லினக்கணம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பான எந்த உறுதியும் மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதட்டமான பகுதிகளில் இருக்கலாம் என்பதால்.
அவர்கள் செல்லும் வழியை துள்ளியமாக தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
என்ன வாதம் வைக்கப்பட்டது
மனுதாரர்கள் தரப்பில் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் ஊர்வலம் செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும்.
இதனை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்.
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் குறித்து விரிவாக உத்தரவு பிரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளது.
சாதி மதம் தனி நபர் குறித்து எக்காரணம் கொண்டும் பேசகூடாது மோதல்களைத் தூண்டும் வகையில் செயல்படக் கூடாது.
பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம், வராமல் தடுக்க சிறந்த வழிகள்..!
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசக்கூடாது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றி பேசக்கூடாது, மதநல்லிணக்கத்தை பற்றியும் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எந்த காரணத்தையும் கொண்டு வன்முறை
வன்முறையை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது போக்குவரத்து தடை ஏற்படும் வகையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.
How to start gas agency dealership business in tamil
ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டு செல்லக்கூடாது மக்களை காயப்படுத்தும் நடவடிக்கை எதுவும் செய்யக்கூடாது.
நீதிமன்ற விதிகளில் ஒன்றை மீறினாலும் போலீசார் சுதந்திரமான நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.