
Annamalai planning to strengthen booth agent
ஆப்ரேஷன் சவுத் இந்தியா தொடங்கிவிட்டது
ஆப்பரேஷன் சவுத் இந்தியா மோடி கொடுத்த புதிய யோசனை உடனே ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை தமிழகத்தில் நடக்கும் புதிய புதிய மாற்றங்கள்.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தமிழகத்தில் துரிதப்படுத்துங்கள்.
என தமிழகத்திற்கு அழுத்தத்தின் மேல் அழுத்தமாக டெல்லியில் இருந்து வருகிறது என்று தகவல்கள் கசிந்துள்ளன.
பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து துல்லியமாக கேட்டறிந்த மூத்த தலைவர்கள்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் தாமரை மலர வேண்டும் என கண்டிப்புடன் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கட்சிக்குள் இருக்கும் முக்கிய தலைவலி
இதற்கான வேலைகளில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைமை மும்முரமாக இறங்கி வேலை செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் நிலை தொடர்பாக அக்கட்சித் தலைமை நடத்திய ரகசிய சர்வேயில் தேர்தல்களில் பாஜகவின் பலவீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எனவே பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து திமுக-அதிமுக இணையாக பலப்படுத்தும் பணிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மும்முரமாக செய்து வருகிறார்.
அதிமுகவுடன் கூட்டணி தொடருமா
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அதிமுகவில் அரங்கேறி வரும் உட்கட்சிப் பூசல், குழப்பங்கள், அரசியல் மாற்றங்களை, துல்லியமாக கவனித்து வருவதாகவும்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அந்த கட்சியுடன் கூட்டணி தொடரும் எனவும் தலைமை சொல்கிறது.
ஆபரேஷன் சவுத் இந்தியா தொடங்கியது
கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆப்பரேஷன் இந்தியாவை அக்கட்சியின் உள்துறைச் செயலாளர் அறிவித்தார்.
இருந்து 6 மாநிலங்களிலும் பாஜக வை தீவிரமாக வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைவர்கள் முழுமூச்சாக இறங்கி உள்ளார்கள்.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்தயாரிப்பு பணிகளையும் இப்போது அதிவேகமாக தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்காக பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளப் போகிறார் இனிவரும் நாட்களில்.
அண்ணாமலை மேற்கொள்ளப்போகும் பயணங்கள்
அண்ணாமலை மாவட்ட வாரியாக சென்று பூத் ஏஜெண்டுகள், உள்ளூர் பாஜக நிர்வாகிகள்,தொண்டர்களை, சந்தித்து அவர்களுக்கு தேவையான யோசனைகள், தேர்தல் நிலவரங்கள்.
உட்கட்சிப் பூசல்கள், என பல விஷயங்களை ஆலோசித்து கருத்துக்களை பெற்று வருகிறார்.
வார்டு வாரியாக அண்ணாமலை கூட்டங்களை கூட்டி வருவதால் பாஜகவின் அடிமட்ட தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
புதிய நம்பிக்கை பிறந்துள்ளது
தற்போது திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி என்பது மிக அற்புதமாக உள்ளது.
தினம்தோறும் அந்தக் கட்சியின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்னெடுத்து வருகிறார்.
அவ்வப்போது அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழல் பட்டியல், அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.
மின்வெட்டு உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களை பற்றி கணக்குகளை வெளியிடுகிறார், அதைப்பற்றி விமர்சனங்களையும் அடிக்க வைக்கிறார்.
இதனால் திமுக அரசுக்கு மிகப் பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது, திரு அண்ணாமலை அவர்களை எப்படியாவது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
சுவையான மட்டன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி..!
என திமுக பல முயற்சிகளை செய்தது ஆனால் அது அத்தனையும் பலிக்கவில்லை.
அண்ணாமலை வைக்கும் கருத்துக்கள் விவாதங்களை இப்பொழுது மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
Rajinikanth becomes governor full details in tamil
கடந்த ஒரு வருட திமுக ஆட்சியை மக்கள் இப்பொழுது வெறுக்க தொடங்கி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.
இதனால் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென திமுகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.