Uncategorized

Atal Pension Yojana scheme full details in tamil

Atal Pension Yojana scheme full details in tamil

Atal Pension Yojana scheme full details in tamil

கல்யாணம் ஆனவர்களுக்கு 10,000/- ரூபாய் பென்சன் கிடைக்கும் உடனே இதில் சேருங்கள்..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில் மாதம் மாதம் குறைந்தபட்சம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய மத்திய அரசு திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த அடல் பென்ஷன் திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

சரி இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் இணைந்து பயன் பெறமுடியும், இந்த திட்டத்தின் நோக்கம் என்ன, இந்த திட்டத்தின் அம்சங்கள் என்ன, போன்ற விவரங்களை பற்றி இப்பொழுது முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவர்களது ஓய்வு காலங்களில் அதாவது 60 வயது நிரம்பிய பின்.

மாதம் மாதம் குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே இந்தத் திட்டத்தில் இணையும் நபர்களுக்கு அரசு தன் சார்பாக ஒரு சிறிய தொகையை வழங்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தகுதி என்ன

18 வயது முதல் 40 வயதிற்குள் உள்ள இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவர்கள்.

ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும்.

மேலும் இந்த கணக்கை நீங்கள் துவங்கும் பொழுது உங்களுக்கு உரிய நாமினியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்

அடல் பென்சன் யோஜனா கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அப்போது அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு தொடங்கப்பட்டாலும்.

இப்போது 18 முதல் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடைய பென்ஷன் பணம் கிடைக்கும்.

இதில் கணக்கு தொடங்குவது எப்படி

இந்த திட்டத்தின் கீழ் இணைய விரும்பும் நபர் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒரே ஒரு அடல் பென்சன் கணக்கு வைத்திருக்கலாம் இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிக பலன் கிடைக்கும்.

ஒரு நபர் 18 வயதில் அடல் பென்சன் யோஜனா வில் சேர்ந்தால் 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5,000/- ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதற்கு மாதம் வெறும் ரூபாய் 210 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

யார் யார் எவ்வளவு தொகை செலுத்தலாம்

நீங்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும்போது 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள்.

குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் தொடங்கி அதிகபட்சம் 5,000/- ரூபாய் வரை ஒருவர் பென்ஷனாக பெற முடியும்.

பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் தொகைகள் கட்ட வேண்டும்.

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சாட்சியாக ஒரு சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும்.

அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம், அதேபோல் ஒவ்வொரு தவணையும் செலுத்தும் போது உங்களுக்கு ரசீது அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதம் மாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தலாம்.

அதாவது உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும்.

உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு வரவு வைக்கப்படும் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பணம் எந்த காலகட்டத்தில் எடுக்கப்படும்

நீங்கள் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்துகிறார்களோ, அந்த தேதிதான் உங்களுடைய அடுத்த மாதத்தின் பணம் செலுத்தும் தேதி.

உதாரணமாக நீங்கள் ஜூலை மாதம் 10ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால் அடுத்த மாதம் 10ம் தேதி அடுத்த தவணை பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும்.

தொகை அதிகரிக்க முடியுமா

வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் செலுத்தும் தொகையை அதிகரிக்க முடியும் அல்லது குறைக்க முடியும் இதற்கு ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி இருக்கிறது.

மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

அபராத தொகை விவரம்

இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்த பிறகு சரியாக மாத மாதம் பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும்.

அதாவது மாதம் மாதம் நீங்கள் 1,000/- ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால் அந்த தொகை ஏதாவது ஒரு மாதம் கட்ட தவறினால் அந்த தொகையை அடுத்த மாதம் செலுத்தும்போது 1,010/- ரூபாயாக செலுத்த வேண்டும்.

ஒருவேளை நீங்கள் தொடர்ச்சியாக 6 மாதம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக மூடப்படும்.

நீங்கள் தொடர்ச்சியாக 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், உங்களுடைய சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்படும், அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் நீக்கப்படுவிர்கள்.

அதிக தொகை பென்ஷன் பெறுவது எப்படி

39 வயதிற்குட்பட்ட வாழ்க்கைத் துணைகள் இந்த திட்டத்தில் பயன் படுத்திக்கொள்ளலாம் 30 அல்லது அதற்கு குறைவான வயது உடைய கணவன் மனைவி இருந்தால்.

அவர்கள் ஒவ்வொரு மாதமும் 577 ரூபாய் அடல் பென்சன் கணக்கில் செலுத்தலாம்.

இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள் என்ன..!

கணவன் மனைவியின் வயது 35 ஆக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த கணக்கில் 902 ரூபாய் செலுத்தவேண்டும்.

Heart Attack warning symptoms on your face

உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வாழ்க்கை துணைகளில் ஒருவர் உயிரிழந்தால் உயிருடன் இருக்கும் பங்குதாரர் ஒவ்வொரு மாதமும் முழு ஆயுள் ஓய்வூதியத் ரூபாய் 8.5 லட்ச பெறுவார்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0