
ATM machine for ration items in tamil
ரேஷன் பொருட்களுக்கு ATM மெஷின் இனி வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை இல்லை..!
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் புதிய வசதியை நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்கள் அமல்படுத்த உள்ளன.
இதன் மூலம் ரேஷன் கடையில் நீங்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை இல்லை.
நம் நாட்டில் ஏழை எளிய மக்களின் பசி மற்றும் வாழ்வாதாரத்திற்கு எப்பொழுதும் அடிப்படையாக இருப்பது இந்த ரேஷன் கடை.
ரேஷன் கடை பல கோடி ஏழை எளிய மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது எனலாம்.
ரேஷன் அட்டை என்பது ஒரு இந்திய குடிமகனின் மிக முக்கியமான ஒரு அட்டையாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நாட்டில் கொண்டுவரப்படும் அனைத்து சட்ட திட்டங்களும் மற்றும் புதிய நடைமுறைகளுக்கு ரேஷன் அட்டையை அடிப்படையாகவே கேட்கப்படுகிறது.
அவ்வளவு முக்கியமான ரேஷன் அட்டையில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி அதை நடைமுறை செய்து வருகிறது.
இப்பொழுது விரைவில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இதற்கான புதிய ATM மெஷின் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
நேரம் விரயம் தொல்லை
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் பலர் ரேஷன் கடைக்கு போவதில்லை அதற்கு காரணம் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
எடை மெஷின் போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும், ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது மட்டும் பிரச்சனையாகவே பல ஆண்டுகளாக இருக்கிறது.
புதிய வசதி அறிமுகம்
இந்தப் பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு காணும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது பல மாநில அரசுகள், இதன்படி இனி ரேஷன் கடையில் நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை கிடையாது.
இப்பொழுது உத்தரகாண்ட் அரசு விரைவில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அந்த மாநிலம் முழுவதும் தொடங்க உள்ளது.
ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச பொருட்களை பெற தகுதியானவர்கள்,இனி வரும் நாட்களில் கடைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை.
புதிய மெஷின் நடைமுறை
இந்தப் புதிய வசதி மூலம் ஏடிஎம் மிஷினில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் இந்த திட்டம் அதிவிரைவில் முன்னோடி திட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தேவைப்படும் போது ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல், தகுதியானவர்கள் இனி உணவு தானியங்களை எடுத்துக் கொள்ள முடியும்.
மிகுந்த மகிழ்ச்சி
ரேஷன் கடைக்கு சென்றாலே மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை இனிவரும் நாட்களில் இருக்காது.
அதே போல் ரேஷன் பொருட்களின் எடை மெஷினில், மோசடி நடைபெறுவதாகவும் உணவு தானியங்களை குறைந்த அளவில் வழங்குவதாகும் பல்வேறு வகையான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த புதிய ரேஷன் மெஷின் விஷயத்தில் அந்த பிரச்சனை இனிவரும் நாட்களில் இருக்காது.
புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்ன..!
விரைவில் இந்த திட்டம் தமிழகத்திற்கு வர உள்ளது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதிலிருந்து கோதுமை, அரிசி, மற்றும் பருப்பு வகைகளை.
10 banks that offer the lowest interest rate on education loans
ஏடிஎம் இயந்திரம் போலவே ஏற்றுக்கொள்ளமுடியும், இந்த வசதி அதிக வரவேற்பை பெற்றுள்ளது நாடு முழுவதும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாநிலம்
ஏற்கனவே இந்த உணவு தானிய ஏடிஎம் திட்டம் ஒரிசா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.