
Avarampoo health benefits list in tamil
ஆவாரம் பூ பயன்கள் என்ன?எதற்கு பயன்படுத்தப்படுகிறது..!
ஆவாரம் பூ என்றால் கடவுளுக்கு பூஜை செய்வதற்கான உகந்த பூவாகும் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம்.
இந்த ஆவாரம்பூவை பெண்கள் விரும்பி தலையில் சுடுவதில்லை ஆனால் இயற்கையாகவே இதை ஒரு சிறந்த மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஒரு மருந்து என்று தான் கூற வேண்டும்.
தலைமுடி வளருவதிலிருந்து, நீரிழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள், என பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடியது ஆவாரம்பூ.
உடலில் காய்ச்சல் ஏற்படுவது ஏதாவது நுண்ணுயிரிகளின் மூலமே நடக்கும் நமது உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் என்றாலும் ஆவாரம் பூவை போட்டு.
வேக வைத்த நீரில் காய்ச்சல் நேரத்தில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும், அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் விரைவில் குணமாகிவிடும்.
தலைமுடிக்கு ஆவாரம் பூ பயன்கள்
ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம், 100 கிராம், பயத்தம் பருப்பு, அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் மூன்று முறை தலைக்கு பூசி அலசி வர தலைமுடி கருப்பாக மாறிவிடும்.
ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை, என அனைத்தையும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தலாம்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உடல் உஷ்ணம் அதிகமாகது.
கொத்து கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம்பூ.
முடி உதிர்வு பிரச்சினை கூந்தலில் ஆவாரம்பூவை வைத்துக் கொண்டால் உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிரும் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.
கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ பயன்கள்
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால், ஒரு கப் எடுத்துக் கொண்டு வாரம் இரு முறை அரைத்து தலைக்கு குளிக்க வேண்டும் உடல் குளிர்ச்சியாகும் முடி கொட்டுவது உடனடியாக நிறுத்தப்படும்.
தலை முடி பளபளப்பாக
200 கிராம் ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்கு குளிக்கும்போது கடைசியில்.
இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றிக் குளித்தால் முடி பளபளப்பாகும்.
மூலநோய் குணமாக
ஆவாரம் பூ கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர், இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்து கொள்ளுங்கள்.
இந்த பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து ஒரு மண்டலம் அதாவது தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உள் மூலம் நோய் முற்றிலும் குணமாகி விடும்.
கண்களின் ஆரோக்கியம்
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியால் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள் சூட்டினால் ஏற்படும் கண் நோய் முற்றிலும் குணமாகி விடும்.
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் சரியாகிவிடும்.
உடல் சக்தி பெற
ஆவாரம் பூ, அதில் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய், சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர உடல் மிகவும் வலிமை அடையும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்
சில அற்புத நன்மைகள் ஆவாரம் பூவின்
ஆவாரம் பூக்களுடன் வெங்காயம், பருப்பு, சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் உடம்பின் பளபளப்பு அதிகமாகும்.
What are the symptoms and cure methods of chest cold
தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊறவைத்து அந்த தண்ணீரை குடியுங்கள் அதிக தாகத்தை தீர்க்கும், சிறுநீர் பிரச்சினை சரியாகும், உடல் துர்நாற்றம் நீங்கும்.