
Awareness of money fraud for notorious Aadhar Card holders
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு பண மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு வழி என்ன..!
இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டை வைத்து தவறாக பயன்படுத்தி பணம் மோசடி செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக UIDAI அறிவித்துள்ளது.
அதனால் தற்போது உள்ள மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
பண மோசடி செய்வதற்கான வாய்ப்பு
ஒரு தனி மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஆதார் கார்டு ஒரு முக்கிய பங்காக விளங்குகிறது.
நம் நாட்டில் ஆதார் கார்டை வைத்து வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, டிக்கெட்களை முன்பதிவு செய்வது, கோவிலுக்கு செல்லும் மற்றும் மொபைல் வாங்க.
சிம் கார்டு வாங்க, இந்தியாவில் அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் கார்டை பயன்படுத்தி ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், புகைப்படம், முகவரி, தொலைபேசி எண், என அனைத்தையும் நம்மால் ஆதார் அட்டையில் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் ஆதார் கார்டில் உள்ள மாற்றங்களை சரிசெய்வதற்கு ஆதார் மையத்தில் அல்லது தபால் அலுவலகத்திற்கு செல்லக் கூடிய சூழ்நிலை இருந்தது.
ஆனால் இப்போது நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இப்பொழுது நீங்கள் வீட்டில் இருந்த படி உங்களுடைய தொலைபேசி மூலம் ஆதார் கார்டில் உள்ள திருத்தங்களை செய்வதற்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய ஆதார் கார்டை திருடி மோசடி செய்யவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
அதேபோல் ஆதார் கார்டு வேறு ஏதாவது காரணத்துக்காக பல்வேறு இடங்களில் தொலைத்து விடுவது வழக்கம், இது உங்களுக்கு தெரியாமல் மிகப்பெரிய ஒரு ஆபத்தில் முடியலாம்.
ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க கூடிய ஒரு முக்கியமான ஆவணம் ஆகும் அதை மற்றவரிடம் கொடுக்கக்கூடாது.
அதனுடைய நகலையும் நீங்கள் கொடுக்க கூடாது, அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதி மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, என்று UIDAI வலியுறுத்தி உள்ளது.
அதனால் உங்களுடைய ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற சூழலில் நீங்கள் உங்களுடைய புதிய மொபைல் நம்பரை அப்டேட் செய்து இருக்க வேண்டும் என UIDAI அறிவித்திருக்கிறது.
கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்
உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய ஆதார் கார்டை திருடி அதை பல்வேறு வகையான அரசாங்க அவனுங்களுக்கு பயன்படுத்தலாம்.
உங்களுடைய மொபைல் எண்ணுக்கு திடீரென்று ஆதார் சம்பந்தமான ஏதாவது ஒரு குறுஞ்செய்தி வந்தால், அதனை நீங்கள் தொடவே வேண்டாம், ஏனென்றால் அதன் மூலம் உங்களுடைய பணம் திருடபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதுபோல் பல்வேறு வகையான சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது.
உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டுமென்று அடிக்கடி இந்த குறுஞ்செய்தி நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு வருகிறது.
இதன் மூலம் உங்களுடைய பணம் திருட படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் இதனை செய்வது சமூகவிரோதிகள்.
கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எண்ணெய் வகைகள் என்ன..!
இதனால் உங்களுடைய ஆதார் கார்டை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
Ration Card new rules and regulations in tamil
அது மட்டுமில்லாமல் 6 மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை இணையதளம் மூலம் ஆதார் கார்டில் உள்ள உங்களுடைய தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.