Schemes

6 ரூபாயில் 1 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு தபால் அலுவலகத்தில் இப்படி ஒரு சிறந்த திட்டம் Bal Jeevan Bima post office child insurance Scheme

Bal Jeevan Bima post office child insurance Scheme

Bal Jeevan Bima post office child insurance Scheme

6 ரூபாயில் 1 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு தபால் அலுவலகத்தில் இப்படி ஒரு சிறந்த திட்டம் நடைமுறையில்..!

இந்திய மக்கள் இன்று இணையதளம் விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இந்திய மக்களை பல வழிகளில் இணைத்தது தபால் அலுவலகம் தான்.

தந்தி வந்தாலே வீட்டில் இருப்போம் எல்லாரும் மகிழ்ச்சியடைவோம் இன்று யுபிஐ மூலம் பணம் அனுப்பினாலும் அன்று தீபாவளி,பொங்கல்,உள்ளூர் பண்டிகை,திருவிழா, போன்றவற்றிற்கு உறவினர்கள் மணி ஆர்டர் கொடுத்து பணம் அனுப்புவார்கள்,தபால் அலுவலகம் மூலம்.

இப்படிப்பட்ட தபால் நிலையம் நாட்டு மக்களுக்கு மிக பல்வேறு விதமான பலன்களை கொடுத்துள்ளது,இந்திய மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது தபால் அலுவலகம் என்று சொல்லலாம்.

தற்போது முக்கிய முதலீடு நிதி சேவைகள் அளிக்கும் அமைப்பாக தபால் நிறுவனம் மாறி உள்ளது.

காலத்திற்கு ஏற்ப தபால் நிறுவனமும் தன்னை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது,தபால் நிறுவனத்தில் இப்பொழுது நவீன இணையதள சேவைகளும் பல்வேறு விதமான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் 6 ரூபாயில் 1 லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு திட்டத்தை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் இந்திய தபால் நிலையத்தில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் ஒரு தபால் நிலைய கணக்கில் ஒரு நாளைக்கு 6 ரூபாய் மட்டுமே முதலீடு செய்து இந்த திட்டத்தின் பயன்களை பெறலாம்.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன

குழந்தைகள் எதிர்பாராத விதமாக அல்லது துரதிஷ்டவசமாக உயிரிழந்தால் 1 லட்சம் வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும்,பால் ஜீவன் வினை யோஜனா திட்டத்தில் மூலம்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் குறைவான முதலீட்டு தொகை கொடுத்து அடித்தட்ட மக்களுக்கும் ஆயுள் காப்பீட்டு பலன்களுக்கு கிடைக்க வேண்டும்.

என்பதற்காக மிகவும் குறைந்த அளவில் தினசரி வைப்புத்தொகை இருப்பதால் ஒரு குடும்பத்திற்கு நிதி சுமை குறைவாக இருக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூபாய் 1 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை குழந்தையின் 18 வயது பூர்த்தி ஆகும் வரை கிடைக்கும்.

18 வயதிற்கு பின்பு குழந்தையின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தால் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு கிராம் சந்தோஷ் திட்டத்தின் வட்டி பலன்கள் உடன் முதிர் தொகை கிடைக்கும்.

தற்போது கிராம சந்தோஷ் திட்டத்தின் போனஸ் தொகை 1000 ரூபாய்க்கு 48 ரூபாய் 20 வயதிற்கு பின்பு பெரும் தொகை குழந்தையின் கல்வி அல்லது பிற நிதி பொறுப்புகளுக்கு தொடர்பான செலவுகளை ஈடு செய்வதற்கு தேவைப்படும்.

ஒரு பக்கம் ஆயுள் காப்பீடு மற்றொரு பக்கம் முதலீட்டு பலன்களை கொடுக்கிறது இந்த திட்டம்.

தம்பதியினர்களுக்கு அதிகப்படியாக 2 குழந்தைக்கு மட்டுமே பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் பொருந்தும்,8 முதல் 20 வயதுடைய குழந்தைகளுக்கு,இந்த திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பெற்றோர்கள் கணக்கை தொடங்கலாம்.

இந்த திட்டத்தில் அதிகப்படியான ஆயுள் காப்பீட்டு தொகை ரூபாய் 1 லட்சம் மட்டுமே என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.

உதாரணமாக 10 வயது குழந்தைக்கு தினமும் 6 ரூபாய் முதலீட்டில் 5 வருட முதலீட்டில் 1 லட்ச ரூபாய் வரையில் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை நீங்கள் பெறலாம்.

இந்த திட்டத்தில் இணைவது எப்படி

உங்களுடைய வேலை சம்பந்தமாக அல்லது தொழில் சம்பந்தமாக நீங்கள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தாலும்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திற்கு வேண்டுமானாலும் இந்த திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.

பெற்றோர்கள் தங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையம் அல்லது உங்களுக்கு பிடித்த தபால் நிலையம் சென்று இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தபால் நிலைய அலுவலர்களிடம் கேட்டீர்கள் என்றால்.

அவர்கள் அனைத்து விதமான தகவல்களையும் உங்களுக்கு கொடுப்பார்கள் இந்த திட்டத்தில் எப்படி இணைய வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை,எப்படி முதலீடு செய்ய வேண்டும்,போன்ற அனைத்து விதமான தகவல்களையும் அவர்கள் கொடுப்பார்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Power Pathiram Enral Enna in tamil 2023

Pathira Pathivu kuritha sila details 2023

Tamil Nadu property tax calculation

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
0
Not Sure
1
Silly
1