
Best 10 agriculter business ideas in tamil
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுயதொழில் பட்டியல்கள்..!
நல்ல வேலையில் இருப்பவர்களும் சொந்தமாக தொழில் செய்பவர்களும் மட்டுமே இப்போது உள்ள காலகட்டத்தில் கடந்து செல்ல முடியும்.
இதுதான் காரணமாக பட்டம் படித்த இளைஞர்கள் முதல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி கொண்ட நபர்கள் வரை சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என அனைவரும் நினைத்து விடுகிறார்கள்.
இவர்களது எண்ணங்களை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும், பல்வேறு வகையான திட்டங்கள் மற்றும் மானியங்களை செயல்படுத்துகிறது.
நீங்கள் விவசாயம் சார்ந்த தொழில் செய்ய விரும்பும் நபர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவில் விவசாயம் சார்ந்த அருமையான சுயதொழில் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் கறவை மாடுகள் அல்லது எருமை மாடுகள் இருக்கவேண்டும் மாடுகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
இந்த தொழிலுக்கு இரண்டு அல்லது நான்கு மாடுகள் இருந்தால் போதும் இந்த மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து.
ஓரளவுக்கு மாதம் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பணத்தை சம்பாதிக்கலாம்.
இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்யலாம் இயற்கையில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு.
இப்பொழுது அதிகமான போட்டி இருக்கிறது ஆகவே இந்த இயற்கை விவசாயம் செய்து உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உங்களால் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
காளான் வளர்ப்பு தொழில்
நகரத்தில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது உணவு முறைகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த உணவுப் பொருள் தான் காளான் விற்பனை செய்வது லாபமான தொழிலாக இருக்கிறது .
ஆகவே காளான் வளர்த்து விற்பனை செய்து அதிகமான லாபத்தை பெற முடியும் இந்த தொழில் செய்ய உங்களிடம் குறைவான இடவசதி இருந்தால் போதும்.
உங்களது வீட்டில் இருந்தபடியே இந்த காளான் வளர்ப்பு தொழிலை செய்து அதிகமான வருவாயை உங்களால் பெற முடியும்.
பூக்கள் வளர்ப்பு
உங்களிடம் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் போதும் அவற்றில் பல வகையான பூக்களை நடவு செய்து விற்பனை செய்யலாம்.
ஒவ்வொரு விதமான பூக்களும் ஒவ்வொரு விதமான மதிப்பு கொண்டிருக்கும், ஆகவே பல விதமான பூக்களை வளர்த்தால் உங்களால் அதிகமான லாபம் பெற முடியும்.
மீன் வளர்ப்பு தொழில்
அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருள் தான் மீன் ஆகவே நீங்கள் மீன் வளர்ப்பு தொழிலை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
மீன் வளர்ப்பில் ஒவ்வொரு விதமான மீன் இனத்திற்கும் அதனுடைய மதிப்பு சந்தையில் வேறுபடும், மீன் வளர்ப்பு தொழில் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
இயற்கை உரங்கள் விற்பனை
மக்கள் இப்பொழுது இயற்கை விவசாயத்தை நோக்கி அதிகமாக ஆர்வம் செலுத்துகிறார்கள் இந்த சூழ்நிலையில் நீங்கள் இயற்கை உரங்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை சந்தையில் பெற முடியும்.
மேலும் நீங்கள் இயற்கை உரங்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் எப்பொழுதும் இந்த தொழிலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக இருக்கிறது தேனீ வளர்ப்பிற்கு அதிகமான இடம் தேவைப்படாது உங்கள் வீட்டில் ஒரு சிறிய அறையில் தேனீக்களை வளர்த்து அதன் மூலம் தேன் விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும்.
சுத்தமான தேன் வாங்கி பயன்படுத்த அதிக மக்கள் இருக்கிறார்கள் ஆகவே தேனீ வளர்ப்பு மூலம் நீங்கள் கணிசமான வருவாயை மாதமாதம் பெறலாம்.
ஆடு வளர்ப்பு
விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆடு வளர்ப்பு மட்டுமே அதிகமான வருவாய் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது இந்த ஆடு வளர்ப்பு மூலம் நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.
அதாவது இன்றைய காலகட்டங்களில் நகர்ப்புறங்களில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு ஆடு விற்பனை செய்யும் பொழுது நீங்கள் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.
மேலும் ஆட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் இந்த தொழிலை செய்வதற்கு அதிகமான ஆடுகளை நீங்கள் கட்டாயம் வளர்க்க வேண்டும்.
காய்கறிகள் விற்பனை
தங்களிடம் சொந்தமாக இடமிருந்தால் போதும் அவற்றில் காய்கறிகளைப் பயிர் செய்து அவற்றை நகர்ப்புறங்களில் விற்பனை செய்யலாம்.
வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய காய்கறிகள்
அல்லது காய்கறி விவசாயம் செய்பவர்களிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கி கமிஷன் முறையில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
Best post office saving scheme in tamil 2022
கோழி வளர்ப்பு தொழில்
கோழி வளர்ப்பு மூலம் அதிகமான பணத்தை குறைந்த நாட்களில் பெற முடியும் நீங்கள் 20 கோழிகளை வாங்கி வளர்க்கும் பொழுது இரண்டு விதமாக நீங்கள் லாபம் பெற முடியும்.
அதாவது கோழி முட்டை மற்றும் இறைச்சி மேலும் கோழி இறைச்சி கடைக்கு விற்பனை செய்வதன் மூலம் தொடர்ந்து லாபத்தை பெற முடியும்.