உடல்நலம்

Best 12 tips reduce body heat in tamil

Best 12 tips reduce body heat in tamil

Best 12 tips reduce body heat in tamil

உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள்

மனித உடலின் வெப்பநிலை ஒருவருக்கொருவர் மாறுபடும் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

உடலின் வெப்பம் அதிகரிப்பதால் தலைமுடி முதல் கால் வரை நம்முடைய உடல் பாகங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடும்.

உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை வழிமுறைகள் பற்றி இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் வெப்பத்தை குறைக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பயன்படுத்துவதால் உடலில் பக்க விளைவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மேலும் செயற்கை முறையில் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் நம்முடைய உடலில் வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

உடலில் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்றுவலி, முகத்தில் பருக்கள், போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகமிக அவசியம்.

Best 12 tips reduce body heat in tamil

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் ஊறவைத்து பின்னர், வெந்நீரில் குளிக்க வேண்டும் இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடல் வெப்பத்தை குறைக்க முடியும்.

தர்பூசணி

உணவு பொருட்கள் மூலம் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெள்ளரிக்காய்

கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறையும் இதில் அதிகமான நீர்ச்சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியும் குறைக்க முடியும்.

புதினா

இயற்கையான முறையில் உடல் வெப்பத்தை குறைக்க புதினா மிகவும் பயன்படுகிறது, தினமும் புதினா ஜூஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் குறையும்.

பால்

குளிர்ச்சியான பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் வேகமாக குறைந்து விடும்.

மோர்

தயிரை விட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது நல்லதாக அமையும் உங்களுக்கு, தினமும் ஒரு டம்ளர் மோர் அதிகாலையில் குடித்து வந்தால் உடலில் வெப்பம் வேகமாக குறைந்து விடும்.

இளநீர்

இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தினமும் இளநீர் அதிகாலையில் குடித்து வந்தால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறும் அதுமட்டுமில்லாமல் சிறுநீரில் சேரும் கற்களும் கரைந்துவிடும்.

மாதுளை பழம்

மாதுளை பழத்தில் அதிகமான நீர்ச்சத்து கரைந்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழம் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் வெப்பநிலை மிக வேகமாக குறையும்.

வெந்தயம்

வெந்தயம் தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் வெப்பம் குறையும் இது மிகவும் பழமையான இயற்கை வைத்திய முறையாகும்.

உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, அப்போது நீங்கள் வெந்தயம் சாப்பிட்டால் வயிற்று வலி உடனடியாக குறையும் மேலும் உடலில் வெப்பம் குறைந்து விடும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதோடு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது, எனவே வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் வெப்பம் குறையும்.

அனைவருக்கும் மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டம்..!

சீரகம்

இரவில் தூங்குவதற்கு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின்னர் குடிக்க வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் உடலில் வெப்பம் குறையும்.

warning symptoms of heart attack before one month

எள்

தினமும் எள் சாப்பிடுவதாலும் உடலில் வெப்பம் கணிசமாக குறைந்து வரும் மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0