
Best 6 foods improve your health benefit
நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் கொஞ்சமாவது இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் இருந்து இன்றுவரை பல நபர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதால் நம்முடைய வாழ்க்கை முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக வேலை செய்யும் நேரமும் அதிகரித்துவிட்டது, இதனால் பல நபரின் உணவு பழக்கவழக்கமும் மாறி உள்ளது, அது மட்டுமில்லாமல் தூங்குவதற்கான நேரமும் அதிகமாக கிடைப்பதில்லை.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் ஆரோக்கியமற்ற உணவுகளையும் நொறுக்கு தீனிகளையும் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால் அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகளை இப்பொழுது நபர்கள் சந்தித்து வருகிறார்கள்.
ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் கட்டாயம் இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது இவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் இது செல்கள் சேதம் அடைவதை குறைத்து சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்கிறது.
இது தவிர ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது மற்றும் நோய்கள் அண்டாமல் உடலை பாதுகாக்கிறது, அதற்கு ஆரஞ்சு பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம்.
நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு இதனுடன் சர்க்கரையோ சேர்த்து சாப்பிடக்கூடாது.
இஞ்சி
இஞ்சி 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசாலா பொருட்களாக இந்த உலகத்தில் இருக்கிறது, இதில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.
ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற நன்மை பயக்கும் பொருட்கள் இதில் உள்ளதால் இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இஞ்சியை நற்பதமான பொடியாகப் பயன்படுத்தலாம் ஆனால் இதை நற்பதமான வடிவில் பயன்படுத்தும்போது அதில் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
இது தொற்று நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது இஞ்சி டீ தயாரித்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் டி நல்ல வாசனையுடன் இருக்கும்.
நீங்கள் டீ பிரியர்கள் என்றால் இஞ்சி டீ அடிக்கடி குடிக்கலாம்,இஞ்சி நீரில் போட்டு கொதிக்க வைத்து, இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் சளி பிரச்சனை, செரிமானப் பிரச்சினை, வயிற்று வலி, போன்றவை குணமாகும்.
பீன்ஸ்
பீன்ஸ்களில் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் செரிமானத்தை சீராக்க கொழுப்புகளின் அளவை குறைக்கக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது.
நீங்கள் உங்கள் உணவில் அடிக்கடி பீன்ஸ் சேர்த்துக் கொண்டால் அது தேவையில்லாமல் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது இதனால் எடை இழப்பு ஏற்படும்.
எனவே உங்கள் அன்றாட உணவில் சிறிதளவு பீன்ஸ் சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் இதில் புரதச்சத்து அதிகமாக கிடைக்கும்.
வெள்ளரிக்காய்
விலைக்குறைவில் மற்றும் எளிதாக கிடைக்க கூடிய இயற்கையான மூலப்பொருள் என்றால் அது வெள்ளிரிக்காய் இதில் 95% நீர்ச்சத்து உள்ளதால் உடலை வறட்சியின்றி எப்போதும் நீரோற்றத்துடன் வைத்துக் கொள்கிறது.
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் தினமும் வெள்ளரிக்காயை உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது இது எலும்புகளை வலிமையாக்கும் இதில் வைட்டமின்கள் ஏ பி சி மக்னீசியம், காப்பர், துத்தநாகம், மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது முக்கியமாக வெள்ளரிக்காயில் வைட்டமின் பி1 பி5 மற்றும் பி7 ஆகியவை நிறைந்து உள்ளது, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம் மற்றும் மன வலியை பெருமளவு குறைக்கும்.
பாதாம்
புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்தான் பாதாம்.
பாதாமில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரோட்டீன், போன்ற ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இவை தசைகளின் வளர்ச்சிக்கு பராமரிப்புக்கும் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது எனவே நொறுக்குத்தீனி சாப்பிடும் நேரத்தில் இதுபோன்ற ஆரோக்கியமாக இருக்கும் பாதாம் பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு உடல் எடை கூடுவது குறைக்கப்படும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மீன்கள்
இறைச்சி வகைகளில் மீன்களுக்கு எப்பொழுதும் தனித்துவம் உண்டு அதுவும் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்கள் என்றால் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.
இறால் வளர்ப்பு தொழில் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்
மீன்களில் ஒமேகா-3 ஊட்டச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் இவை இதயத் தமனிகளில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவு குறைக்கும்.
How to find pure oil made in Czech in tamil
வாரத்திற்கு இரண்டு முறை மீன் உணவை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.