
Best 6 post office scheme details in tamil
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 6 சிறந்த திட்டங்கள் வங்கி வட்டியை விட அதிகம் தரும் அஞ்சலக திட்டங்களில்..!
அஞ்சலகத்தில் முதலீடு செய்வது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாதுகாப்பானது அது மட்டுமில்லாமல் நல்ல லாபகரமான திட்டமாகவும் உள்ளது.
ஏனெனில் வங்கிகளில் இருக்கும் வட்டியை விட அஞ்சலக திட்டங்களில் வட்டி விகிதம் அதிகம்.
அப்படிப்பட்ட அஞ்சலக திட்டங்களில் எந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் எந்த திட்டத்தில் உங்கள் முதலீடு விரைவில் இரு மடங்காக அதிகரிக்கும். என்பதை இந்த கட்டுரையின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய நவீன காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி மரியாதை மக்களிடத்தில் இருக்கிறது.
ஏனெனில் வட்டி விகிதம் அதிகம் பாதுகாப்பானது சந்தை அபாயம் இல்லை வரிச்சலுகை என பல்வேறு நன்மைகள் இதில் நிறைந்துள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு
அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கு போன்றது வங்கி கணக்கிலும் பெரும் பெரும்பாலான சேவைகளை நாம் இந்த அஞ்சலக சேமிப்பு கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த கணக்கின் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு 4 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது, இந்த கணக்கில் செய்யப்படும் முதலீடு 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது.
அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி
அஞ்சலகத்தில் உள்ள தொடர்ச்சியான வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் 5.8 சதவீதமாக வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 12.41 வருடங்களில் உங்களது முதலீட்டை இருமடங்காக உயர்ந்துவிடும்.
மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இதில் பணம் கிடைக்கும், இது மாதம் மாதம் சிறு தொகையாக சேமிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு மிகச் சிறந்த திட்டமாக அஞ்சலகத்தில் இப்பொழுது இருக்கிறது.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகத்தில் மாதாந்திர வருமானம் திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 6.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையானது 10.91 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துவிடும்.
இந்த திட்டத்தில் மாதம் மாதம் ஒரு வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்து கொள்ள முடியும், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த திட்டமாக இது இருக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர்களின் பிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்ய நினைக்கும் நபர்களுக்கு ஏற்றது இது 15 ஆண்டுகால திட்டமாக இருக்கிறது.
இந்த திட்டத்தில் குறைஞ்சபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கிறது இதில் 10.14 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு இரு மடங்காக உயர்ந்து விடும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த திட்டம்.
இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் எந்த நேரத்திலும் இணைந்து கொள்ள முடியும் தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
தொகையானது 9.47 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும், வருமான வரி சட்டத்தின் படி அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கொடுக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாகும்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் தான் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு விருப்பமிருந்தால் நீட்டிக் கொள்ள முடியும்.
கண்டிப்பாக எடுக்க வேண்டிய 6 இன்சூரன்ஸ் திட்டங்கள்.
இதில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கேட்கலாம், இந்த திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
coronavirus 3rd waves starting in India in tamil
இந்த திட்டத்தில் 9.73 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு இரு மடங்காக உயர்ந்து விடும்.