
Best cooking oil for heart health in tamil
உங்கள் இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில சமையல் எண்ணெய் வகைகள் என்ன..!
இதயத்தை நீண்ட காலமாக இளமையாக வைத்திருக்க சரியான உணவை கட்டாயம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் சரியான இயற்கையான உடலுக்கு அதிகபடியின் நன்மை கொடுக்கும் சமையல் எண்ணெய் பயன்படுத்துவது மிக முக்கியம்.
சமையலில் எண்ணெய் இல்லாமல் உணவை சுவைக்க முடியாது சமையல் எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் அதிகப்படியான சமையல் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவுகளை ஏற்படுத்தும்.
இருதய நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் எப்பொழுதும் செலுத்த வேண்டும்.
இருதயம் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் சில சமையல் எண்ணெய் வகைகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
சமையலுக்கு நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் இதயத்திற்கு மிகவும் நல்லது ஒமேகா-3 ஒமேகா-6 மற்றும் ஒமேக-9 கொழுப்பு அமிலங்கள் எள் எண்ணெயில் காணப்படுகிறது.
நல்லெண்ணெய் சாப்பிட சுவையாக இருக்கும் இந்த எண்ணெய் பல நோய்களை குணப்படுத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லெண்ணெய் மிகவும் நல்லது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உடல் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,தேங்காய் எண்ணெய் சமையலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இருதய நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தேங்காய் எண்ணெய் செரிமான அமைப்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் பல நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு,இது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது சர்க்கரை லேபிளை குறைக்கிறது,இதயத்தின் நோய் செயல்முறையை குறைக்க அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்கும் தாவர அடிப்படையில் கலவைகள் இதில் நிறைந்துள்ளன.
அரிசி தவிடு சமையல் எண்ணெய்
ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம்பப்படுகிறது இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அமிலங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இது கொழுப்பை கட்டுப்படுத்துகிறது இந்த எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது,அரிசி தவிடு எண்ணெய் சீனா மற்றும் ஜப்பானில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
அவகோடா பழம் எண்ணெய்
அவகோடா பழம் ஆரோக்கிய சமையல் எண்ணெய்களில் ஒன்றாக இருக்கிறது அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இந்த எண்ணெயில் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இருதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அவகோடா சமையல் எண்ணெய் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சரும பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
இந்த எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் வீக்கமும்,மூட்டு வலி மற்றும் உடல் பருமன் குறைகிறது.
சூரியகாந்தி எண்ணெய்
சூரியகாந்தி எண்ணெய் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கும் சூரியகாந்தி எண்ணெயில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொழுப்பை கரைக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைத்து உணவில் சுவையை பல மடங்கு அதிகரிக்கிறது,சூரியகாந்தி எண்ணையின் நன்மைகள் காரணமாக இது பிரிமியம் எண்ணெயாக கருதப்படுகிறது.
கடலெண்ணெய்
நம் தமிழ் கலாச்சாரத்தில் கடலெண்ணெய் பல ஆண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது,தமிழ்நாட்டின் தட்பவெட்ப சூழ்நிலைக்கேற்ப கடலை எண்ணெய் சரியானதாக இருக்கிறது.
கடல் எண்ணெயில் இருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Power Pathiram Enral Enna in tamil 2023