
Best health nutrition for pregnant women in tamil
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து விவரங்கள்
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை பெற சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியமாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு சாப்பிட்டால் மட்டுமே வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதுமான அத்தியாவசியமான எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
உணவை பொருத்த மட்டில் எதை சாப்பிடலாம், எதை தவிர்க்க வேண்டும், என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது ஒரு பொதுவான வழக்கம்.
சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள தவறினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு பல்வேறு வகையான குறைபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மிக முக்கியமாக குழந்தைகளுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து விவரங்களை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வைட்டமின் டி ஊட்டச்சத்து
சுண்ணாம்பு ஊட்டச்சத்து கிரகிக்க வைட்டமின் டி உதவும் ஆகையால் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர வைட்டமின் டி அத்தியாவசியம்.
பால் மீன்கள் மற்றும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி சத்தைப் பெற முடியும், கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 0.015 மி.கி அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
போலேட் ஊட்டச்சத்து
சிசுவின் உடலில் புரதச்சத்து மற்றும் ரத்தம் தயாரிக்க இந்த ஊட்டச்சத்து மிகவும் அவசியம் பிறவியில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளைத் தவிர்க்க உதவும் கீரை வகைகள், கமலாப்பழம் சாறு வகைகள், பட்டாணி, பீன்ஸ், ஆகியவற்றில் அதிகமாக இந்த ஊட்டச்சத்து இருக்கின்றது.
இதனால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளைத் தவிர்க்க, பிரசவ காலத்தின் முதல் 12 வாரங்களில் 200 மில்லி கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அது மட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 100 மில்லி கிராம் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது.
அயோடின் ஊட்டச்சத்து
தாய் மற்றும் குழந்தைகளுக்கு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அயோடின் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.
இதன் மூலம் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக வளரும் கர்ப்பிணிப்பெண்கள் நாளொன்றுக்கு 250 மில்லிகிராம் அயோடின் ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ ஊட்டச்சத்து
கர்ப்பிணி பெண்கள் நாள் ஒன்றுக்கு 900 மில்லி கிராம் வைட்டமின் ஊட்டச்சத்து கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சி, கண் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.
கீரை வகைகள், ஆட்டு இறைச்சி, கடல் உணவு, ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
சுண்ணாம்புச்சத்து
உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்பு ஊட்டச்சத்து மிகவும் அவசியமாக தேவைப்படும், பாலாடைக்கட்டி மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1,000 மில்லி கிராம் அளவு சுண்ணாம்பு ஊட்டச்சத்து கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து
சிசுவிற்கு பிராணவாய்வு கொண்டு சேர்க்க இரும்பு சத்து மிகவும் அவசியம், சிகப்பு இறைச்சி, பட்டாணி, காய்ந்த பட்டாணி, ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
சொத்தைப்பல் சரியாக சில இயற்கை வழிகள்
புரதச்சத்து
குழந்தையின் வளர்ச்சிக்கு புரதச்சத்து முக்கியமானதாக இருக்கிறது குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து கட்டாயம் தேவை.
Best 10 agriculter business ideas in tamil
கர்ப்பப்பை திசுக்கள் மற்றும் மார்பகங்கள் வளர உதவுவதோடு உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க, கர்ப்பிணி பெண்கள் நாள் ஒன்றுக்கு 100 புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.