
Best mileage bikes 2022 in tamil
அதிக மைலேஜ் தரும் சிறந்த இரண்டு சக்கர வாகனங்கள்..!
நம் இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகமாக பயன்படுத்துவது இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே.
ஒரு குடும்பத்தில் குறைந்தது 2 அல்லது 3 இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளது.
தொடர்ந்து ஏறிவரும் எரிபொருட்களின் விலை காரணமாக இரு சக்கர வாகன விற்பனை என்பது இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் வரும் காலங்களில் மின்சார வாகனம் அதிக அளவில் விற்பனைக்கு வரும் என்பதில் மாற்றம் இல்லை.
உலகில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான இரண்டு சக்கர வாகனங்கள் இன்ஜின் திறன் மற்றும் அதன் வடிவமைப்பு பொருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒருசில இருசக்கர வாகனங்கள் அதனுடைய மைலேஜ் தரும் திறன் கொண்டு உருவாக்கப்படுகிறது.
அந்தவகையில் நாம் இந்த கட்டுரையில் அதிக மைலேஜ் தரக்கூடிய இருசக்கர வாகனங்களின் பட்டியலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பஜாஜ் CT 110 (Bajaj CT 110)
இந்த பைக்கில் 115.45 cc இன்ஜினும் 8.48 bhp ஆற்றலைக் கொண்டுள்ளது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 75 kmp தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது இதனுடைய விலை ரூபாய் 56,356 (Ex- showroom Price)
ஹீரோ HF டீலக்ஸ் (Hero HF deluxe)
உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் இதுவும் சிறந்த பைக் 97.2 CC இன்ஜினும் 7.91 bhp ஆற்றலைக் கொண்டுள்ளது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சம் 65 kmp வரை செல்லக்கூடியது,இதனுடைய விலை ரூபாய் 52,033 (Ex- showroom Price)
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus)
இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான இரண்டு சக்கர வாகனங்களில் முதன்மையாக எப்பொழுதும் இருப்பது இந்த பைக் தான் 97.2 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது 7.91php ஆற்றலை கொண்டுள்ளது ஒரு லிட்டருக்கு 65 kmp தூரம் வரை மைலேஜ் கொடுக்கும் இதனுடைய விலை ரூபாய் 63,856 (Ex- showroom Price)
டிவிஎஸ் ரைடர் 125சிசி (TVS Raider 125cc)
உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் இதுவும் சிறந்த இடத்தை பிடித்துள்ளது 124.8 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது 11.2 bhp ஆற்றலைக் கொண்டுள்ளது ஒரு லிட்டருக்கு 60 kmp தூரம் வரை மைலேஜ் கொடுக்கும் இதனுடைய விலை ரூபாய் 81,006 (Ex- showroom Price)
ஹீரோ பேஷன் ப்ரோ (Hero Passion Pro)
அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் இதுவும் ஒன்று 110 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது 9.02 bhp ஆற்றலைக் கொண்டுள்ளது ஒரு லிட்டருக்கு 65 kmp தூரம் வரை செல்லக் கூடியது இதனுடைய விலை ரூபாய் 69,691 (Ex- showroom Price)
ஹோண்டா ஷைன் எஸ்பி 125 (Honda Shine SP 125)
அதிக மைலேஜ் மற்றும் அதிக மக்களால் விரும்பக்கூடிய இரண்டு சக்கர வாகனங்களில் பெயர் பெற்றது இந்த வாகனம்.
ஒரே வாரத்தில் சைனஸ் நோயை குணமாக்கும் அற்புத மருந்து..!
124 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது 10.72 bhp ஆற்றலும் உள்ளது ஒரு லிட்டருக்கு 60 kmp மைலேஜ் கொடுக்கிறது,இதனுடைய விலை ரூபாய் 79,365 (Ex- showroom Price)
டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport)
டிவிஎஸ் நிறுவனத்தின் அதிக விற்பனையான மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடிய சிறந்த வாகனமாக இது எப்பொழுதும் உள்ளது.
Madurai AIIMS Medical College construction work
பைக்கில் 109.7 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது 8.18 bhp ஆற்றலும் கொண்டுள்ளது இந்த பைக் ஒரு லிட்டருக்கு 73 kmp வரை செல்லும் இதனுடைய விலை ரூபாய் 56,966 (Ex- showroom Price)