
Best post office saving scheme in tamil 2022
மாதம் மாதம் வருமானம் வேண்டுமா அப்படினா அஞ்சலகத்தில் இந்த திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவினை பொருத்தவரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் இன்றும் மக்களிடத்தில் மிக முக்கிய திட்டங்களாக இருப்பது, நம்பிக்கையான, பாதுகாப்பான திட்டங்களாக மக்களால் கருதப்படுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான்.
ஏனெனில் முதலீட்டுக்கு பங்கம் இல்லாத பாதுகாப்பான நிரந்தரமான வருமானம் ஈட்டக்கூடிய முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகிறது.
பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வயதான காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
மாதம் மாதம் அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகை போல் கிடைத்தால் வயதான பிறகு நன்றாக இருக்கும் என நினைப்போம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கக்கூடிய திட்டம் அஞ்சலகத்தில் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டம்மாகும்.
வயதானவர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்
அஞ்சலகத்தில் இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாதாமாதம் வருமானம் பெற முடியும்.
இதனால் இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான சிறந்த முதலீட்டுத் திட்டமாக மக்களால் பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு
ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துகொள்ளலாம்.
இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கி கொள்ள முடியும் கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
முதிர்வு காலம்
இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும் இதனை முதிர்வு காலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம்.
வட்டி விகிதம் எவ்வளவு
அஞ்சலகத்தில் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுயுள்ளது.
இதில் கூட்டு வட்டி கிடையாது சிம்பிள் வட்டி திட்டம் தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு இந்தத் திட்டத்திற்கு வட்டி வழங்கப்படும்.
முதிர்வு காலம் வரை வட்டி கிடைக்குமா
அதேபோல் முதிர்வு காலம் வரை இந்த திட்டத்திற்கு வட்டி தொகை வழங்கப்படும், வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும் வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது.
அதே போல் இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் உங்களுக்கு அதில் ஏதேனும் பிரச்சனை எப்போதும் இருக்காது.
தொடர் வைப்பு நிதி திட்டம்
நீங்கள் இந்த திட்டத்தில் இணையும்போது 6.6 சதவீதம் வட்டி விகிதம் எனில் அதே வட்டி விகிதம் தான் இறுதிவரையில் கிடைக்கும்.
ஆக உங்களுக்கு வட்டி குறைந்தால் வருமானம் குறையும் என்ற கவலை எப்பொழுதும் வேண்டாம், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி அஞ்சலக சேமிப்பு கணக்கில் முதலீடு செய்து வைத்துக் கொள்ளலாம்.
அல்லது வங்கி கணக்கில் மறுபடியும் முதலீடு செய்து வைத்துக் கொள்ளலாம், அதோடு இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தை தொடர் வைப்பு நிதி திட்டம்மாகாவும் தொடர்ந்து கொள்ள முடியும்.
கூடுதல் முதலீடு செய்ய முடியுமா
உங்களது முதலீடு இந்த திட்டத்தில் இரு முறையில் பெருகிவிடும் இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவும் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் தொகைக்கு சாதாரண அஞ்சலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்படும்.
நாமினி வசதி இருக்கிறதா
அஞ்சலகத்தில் இந்த திட்டத்தில் நாமினி வசதி இருக்கிறது அதற்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோல் உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்படும் அதற்கு நீங்கள் வரி கட்டாயம் செலுத்த வேண்டும்.
மாத வருமானம் வட்டி விகிதம்
இந்தத் திட்டத்திலும் காலாண்டுக்கு ஒருமுறை வட்டிவீதம் மத்திய அரசால் மாற்றம் செய்யப்படுகிறது.
1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 550 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1,110 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
மூக்கடைப்பு சரி செய்ய வீட்டு வைத்தியம்
3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1,650 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
4 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,200 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
Post office deposit vs sbi fixed deposit which one is best
4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,475 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 4,950 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.