
Best tips how to handle chronological body pain
தொடர்ச்சியாக நாள்பட உடம்பு வலி இருக்கா அதை கவனிக்காமல் விட்டால் என்ன ஆபத்து ஏற்படும்
மருத்துவ உலகில் வலி ஏற்படுவது என்பது பொதுவான ஒரு நிலை என்று சொல்லப்படுகிறது. வலி என்பது இதய நோய், நீரிழிவு நோய், மற்றும் புற்றுநோய் விட அதிக மக்களை பாதிக்கிறது.
அதிலும் முதுகு வலி ,மன அழுத்த கோளாறுகள், தலைவலி கோளாறுகள், அனைத்தும் நாள்பட்ட வலிகள் அல்லது தொடர்ச்சியான வலி என்பது உள்ளது.
அப்படிப்பட்ட வலியை சரியான முறையில் எப்படி கையாள்வது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
நம்மில் பெரும்பாலானோர் கடுமையான வலியை எப்போதாவது வாழ்க்கையில் ஒருமுறை கண்டிப்பாக சந்தித்திருப்போம், அதிலும் குறிப்பாக பல்வலி, தலைவலி, எலும்பு வலி, போன்றவை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும்.
சில உடல்நல பிரச்சனைகளால் ஏற்படும் வலியை விட, காரணமின்றி ஏற்படும் நீண்டகால வலியால் அதிக மக்கள் வழிபடுகிறார்கள்.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் ஏற்படும் வலிதான் நீண்டகால வலி, நரம்பு மண்டல வலிக்கு இது வழிவகை செய்யும். உலக அளவில் சுமார் 20% மக்கள் நாள்பட வலியால் தினம்தோறும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
வலி பற்றிய பொதுவான விழிப்புணர்வு
பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க வலி அவ்வப்போது உடலில் தோன்றும், இது பொதுவானது தான் என்றாலும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முதுமைக் கால வலியை எளிதாக போக்க முடியும்.
நீண்டகால வலியை தடுக்க வேண்டுமெனில் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் எடுக்க வேண்டும்.சர்வதேச அளவில் செப்டம்பர் மாதம் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
நாள்பட்ட வலி ஆபத்தானதா
உலகெங்கிலும் வயதான மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் உள்ள மருத்துவ வளர்ச்சி அறுவை சிகிச்சை அல்லது மாத்திரைகளால் அனைத்து வலிகளையும் தீர்ப்பதற்கு வழிகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாத உண்மை.
தொடர்ச்சியான நாள்பட வலிக்கு சிகிச்சை அளிப்பது என்பது ஒரு சவாலான பணியாக இருக்கிறது, ஏனெனில் நாம் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வலியை அனுபவிக்க கூடும்.
இதற்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதிரியான சிகிச்சை அணுகுமுறை அனைவருக்கும் வேலை செய்யாது ஆங்கில மருத்துவத்தில்.
ஏற்படும் பிரச்சனைகள் என்ன
நாள்பட்ட வலி ஒரு நோயாகவே இன்றைய உலகில் பார்க்கப்படுகிறது, வலியை போக்க வாழ்க்கை தரமும் முக்கியமானது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போல வலியை போக்கும் சிகிச்சை மேற்கொண்டு சரியாக செய்யவும் முடியும்,ஆனால் சரி செய்யாமல் விட்டால் நீண்ட கால துன்பங்கள் தொடரும்.
வழி மேலாண்மைக்கான கிரையோ அப்லேஷன் சிகிச்சை தற்போது இந்தியாவில் கிடைக்கிறது.
மூட்டு வலி இடுப்பு மற்றும் தோள்பட்டை வலி, புற்றுநோயால் ஏற்படும் வலிகள், விலா எலும்பு முறிவு, போன்ற நரம்பு வலியிலிருந்து விடுபட தற்போது அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுவாக வலியின் தாக்கம் ஒருவரின் உடல் துன்பத்திற்கு மட்டுமின்றி,எரிச்சலடைய செய்யும், மன சோர்வடையும், கவலைப்படவும், சுறுசுறுப்பாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் இருக்கும்.
அதோடு நிதி பிரச்சினைகள் மற்றும் வேலை பிரச்சனைகளும் இதனால் ஏற்படும்.
நாள்பட வலியை தடுக்க என்ன செய்ய வேண்டும்
How to get rid of wastes in the body 5 amazing
நாள்பட வலியை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரின் மனதிலும் இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் எடை வழக்கமான உடற்பயிற்சி, தியானம், யோகா, போன்றவை செய்து எப்போதும் மன அழுத்தத்தை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.
Health Benefits of Eating Peanuts
மன அழுத்தம் என்பது சரியாக இருந்தால் எந்த ஒரு நோயும் உங்களை அண்டாது, மது அருந்துதல், புகை பிடித்தல், போன்ற பழக்க வழக்கங்கள் உங்களுக்கு எல்லாம் மாதிரியான வியாதிகளையும் உடலில் தோற்று விட்டுவிடும்.