Uncategorized

Big secret release nalini about rajiv gandhi murder

Big secret release nalini about rajiv gandhi murder

Big secret release nalini about rajiv gandhi murder

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கியமான ரகசியத்தை வெளியிட்ட நளினி..!

1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள் அதில் 25 நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில் 7 நபர்கள் மட்டுமே முக்கிய குற்றவாளிகள் அவர்களுக்கு தூக்கு தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் பின்பு 2014ஆம் ஆண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சுமார் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 நபர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

உலகில் அதிக நாட்கள் சிறையில் இருந்த நபர்கள் இவர்கள்தான் இதில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன்,ராபர்ட் பாய்ஸ், ஜெயக்குமார்.

விடுதலை செய்வதற்கு என்ன காரணம்

இந்த வழக்கில் இவர்களை விடுதலை செய்வதற்கு இந்தியன் சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது.

காரணம் இவர்கள் கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் தங்களுடைய வாழ்நாளை கழித்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்து விட்டது.

இவர்கள் சிறையில் நடந்துகொண்ட விதம், இவர்கள் கல்வி கற்றுக் கொண்டார்கள், இவர்களுடைய வயது, அதிக நாட்கள் சிறையில் இருந்துள்ளார்கள்.

என்ற மனிதாபிமான அடிப்படையில் இவர்களை சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது.

பிரியங்கா காந்தி என்ன செய்தார்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நளினியை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து தனது தந்தை இறப்பு பற்றி கண்கலங்கினார்.

அப்போது நளினி நான் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை இந்த வழக்கில் எனக்கு சம்பந்தம் இல்லை என தெரிவித்தார்.

பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவம் உயிரிழந்த 32 நபர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறையிலிருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுக்கு ஆளானேன் 6 ஆண்டுகள் உயர்கல்வி படித்து முடித்தேன்.

24 மணி நேரமும் சிறைவாசம்

ஆரம்பத்தில் 24 மணி நேரமும் சிறையில் தான் இருந்தேன் எனக்கு சிறையில் பிரசவம் பார்க்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்த பின்பு என்னை சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்கள்.

நளினி வைக்கும் முக்கிய கோரிக்கை

எனது கணவர் இலங்கை சேர்ந்த நபர் என்பதால் அவர் இப்பொழுது திருச்சி இலங்கை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர் இங்கிலாந்து சென்று விடுவார்.

நானும் இங்கிலாந்து சென்று எனது குழந்தையுடன் அங்கு என்னுடைய மீதி வாழ்க்கையை கழித்து விடுவேன் என நளினி தெரிவித்துள்ளார்.

முதலீடு இல்லாமல் மாதம் 2,00,000/- லட்சம் ரூபாய் எப்படி சம்பாதிப்பது..!

சிறையில் இருந்தபோது தையல், ஓவியம், சேலை டிசைன், கைவினைப் பொருட்கள் செய்வது, போன்ற சுய தொழில்களை கற்றுக்கொண்டேன்.

ஒரு மாதம் காலம் சிறை விடுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி மேலும் கணவரை மீட்டு எடுக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

5 best investment plan in tamil

அனைவரும் உதவி செய்ய வேண்டும் அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவித்து என் மகளுடன் சேர்க்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

What is your reaction?

Excited
1
Happy
2
In Love
0
Not Sure
1
Silly
2