
Bitter gourd health benefits list in tamil
பாகற்காயில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா
பாகற்காயில் இருக்கும் கசப்புத்தன்மை காரணமாக இந்த பாகற்காயின் பெயரைக் கேட்டாலே ஒரு சிலர் முகம்சுளிப்பது உண்டு.
கசப்புத்தன்மை அதிகமாக இருந்தாலும் இந்த பாகற்காயில் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது இது கொடிவகையைச் சார்ந்தது.
இது எவ்வித பருவ காலங்களிலும் வேறுபாடின்றி அனைத்து சூழ்நிலைகளிலும் வளரும் தாவரமாக இருக்கிறது, இதன் அறிவியல் பெயர் மோமோர்டிச சரண்டிய வகையில் ஏராளமான விட்டமின்களும், புரதச்சத்தும், நிறைந்துள்ளது.
பாகற்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன அவை எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீரிழிவு நோய், கல்லீரல் வீக்கம், வயிற்றுக் குமட்டல், தோல்நோய், கண்கள் சார்ந்த பிரச்சனைகள், விரைவில் புண்கள் குணமாக, ரத்தம் சுத்திகரிப்பதற்கு, உள்ளிட்ட வியாதிகளுக்கு பாகற்காய் மருந்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதனை உணவில் நீங்கள் அடிக்கடி சேர்த்து வந்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்
அதிக அளவு வைட்டமின் ஏ 90 சதவீதம், வைட்டமின் சி,கேட்டோஜின்,Gallic Acid, Chlorogenic Acid போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.
92-95 கிராம் உள்ள பாகற்காயில் 2 கிராம் அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, 4-5% வரை உள்ள சத்துக்கள் பொட்டாசியம் அதிக அளவில் இதில் உள்ளது.
சருமத்தை பாதுகாக்க
பாகற்காயில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் சரும செல்கள் சிதைவடையாமல் இருப்பதற்காகவும், கண்பார்வை அதிகரிப்பதற்கும் உதவுகிறது, மேலும் இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
சர்க்கரை நோயை குணப்படுத்த
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு சிறந்த மருந்து பொருளாக இருக்கிறது, இதில் இருக்கும் கெரட்டின் பாலிபெப்டைட் (Keratin Polypeptide) இருப்பதால் உடலில் இன்சுலின் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது, இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
உடல் எடை குறைக்க
பாகற்காயில் இருக்கும் Chlorogenic acid (குளோரோஜெனிக் அமிலம்) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் ட்ரைகிளிசரைட்ஸ் LDL கொழுப்பு போன்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து HDL போன்ற நல்ல கொழுப்பு அமிலங்களை உடலில் அதிகரிக்கிறது.
கெட்ட கொழுப்புகளை கரைப்பதால் உடல் பருமனாக உள்ளவர்கள், இது ஒரு சிறந்த மருந்துப் பொருளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அல்சரை குணப்படுத்த
வயிற்றில் உள்ள குடல் புழுக்கள், வயிற்றுப் புண், அல்சர், சிறுநீரக பிரச்சனைகள், போன்றவற்றை தடுக்கவும் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
மூச்சுத்திணறல், சளி, இருமல், போன்றவற்றை குணப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
இதய நோய் வராமல் தடுக்க
மஞ்சள் காமாலை குணமாக பாகற்காய் சாறுடன் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்துவர செரிமான கோளாறுகளை சரி செய்யவும் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பாகற்காயை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் கணையப் புற்று நோய் வராமல் தடுக்கலாம், இதயத்தைப் பாதுகாப்பது.
பாகற்காய் அல்லது அதன் இலையை வேகவைத்து சாப்பிடுவதால் சரும நோய்கள், காயங்கள், கருவளையங்கள் குணமடையும்.
பாகற்காய் தீமைகள்
அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வேறு ஏதேனும் தொற்றுகளால் ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.
காடை வளர்ப்பு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ 30,000/-
சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
New record for fitting pig kidneys to humans
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் பின்பு பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.