
Borewell scheme subsidy full details in tamil
விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% தமிழக அரசு மானியம் பெறுவது எப்படி..!
இந்தப் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பாசன வசதி திட்டத்திற்கு ரூபாய் 10.19 கோடி நிதி உதவி வழங்க தமிழக அரசு ஆணையிட்டது.
இதன் மூலம் சிறு, குறு, விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது.
விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கித்தரும் திட்டத்திற்கு தமிழக அரசு 10.19 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்துள்ளது.
சாகுபடி பரபரப்பை தமிழகத்தில் அதிகரிக்க நடவடிக்கை தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்குவதன், மூலம் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகளுக்கு.
அதிக வருமானம் பெற வேண்டும் என்ற புதிய நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிறு குறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை உருவாக்கி.
பம்புசெட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
முதல் தவணையாக ஒதுக்கப்பட்ட தொகை
இந்த திட்டத்தில் முதல் தவணையாக 6 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதன்மூலம் 118 விவசாய குழுக்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழக அரசு 10 கோடியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்தியது கடந்த 2020ஆம் ஆண்டு.
ஆழ்துளை கிணறு அமைக்க விலை நிலவரம்
அரசாணைப்படி இந்த திட்டத்தின் கீழ் 90 மீட்டர் ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்க அதிகபட்சம் தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
100 மீட்டர் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் 11 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது, 20 மீட்டர் ஆழ்துளை திறந்தவெளி கிணறு அமைக்க அதிகபட்சம் ரூபாய் 6.5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்புசெட் அமைப்பதற்கு அதிகபட்சம் ரூபாய் 3.26 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்புசெட் அமைப்பதற்கு அதிகபட்சம் ரூபாய் 75 ஆயிரமும்.
நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு அதிகபட்சம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயும், இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் என்ன
தமிழக அரசு அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட அதற்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைத்தால் குழு உறுப்பினர்கள் அதற்கான கூடுதல் செலவினை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் கூட்டுறவு சங்க விதிமுறைகளின்படி தங்களுடைய குழுக்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் பாசன வசதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை முறையாக விவசாய குழுக்கள் அனைவரும் சரிசமமாக தங்களுடைய நிலத்திற்கு ஏற்றபடி மற்றும் பயிர்களுக்கு ஏற்ற படி பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் பாசன அமைப்புகளை பராமரிப்பு மற்றும் அதற்கான மின்சார செலவினை இந்த விவசாய குழுக்களை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் நிலங்களில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கி, நவீன நூண் நீர் பாசன அமைப்புகளை முழு மானியத்தில் அமைத்து தரப்படும்.
தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டில் 1,233 சிறு குறு ஆதிதிராவிடர் பழங்குடியினர்.
பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து சாகுபடி மேற்கொண்டு அவர்களின் பொருளாதார நிலையும் ஏற்பட வழிவகை செய்துள்ளது.
தேவைக்கேற்ப இந்த திட்டத்தின் மூலம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவும்.
இந்த திட்டம் செயல்படுத்திய மாவட்டங்கள்
கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளுவர், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்.
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2022..!
பொதுப்பணித்துறையினர் நிலத்தடி நீர் பாதுகாப்பான குரு வட்டம் என கண்டறியப்பட்டு மொத்தம் 47 குரு வட்டங்களில் சிறு குறு ஆதிதிராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து.
How to make samosa recipe in tamil
அவர்களுக்கு பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயிகளிடையே பகிர்ந்து பயன்பெறும் வகையில் வேளாண் துறை மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.