
Car explosion in Covi and raids across Tamil Nadu
விலகாத மர்மம் கோவையில் கார் வெடிப்பில் உயிரிழந்த நபர் யார் இரவு நடந்தது என்ன..?
தமிழகம் முழுவதும் ரகசியமாக போலீஸ் விசாரணை மற்றும் கைது செய்வதில் இறங்கியுள்ளார்கள்..!
விடியல் அரசு வந்த பிறகு கஞ்சா விற்பனை, போதைப்பொருள் விற்பனை.
இந்துக்கள் கோவில் இடிப்பு,இந்து மதம் இழிவுபடுத்துதல், பெண்களை ஆபாசமாகப் பேசுதல், போன்றவை தினந்தோறும் அரங்கேறி வரும் செயல்.
அதிமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை, கஞ்சா விற்பனை, போதை மாத்திரை விற்பனை,போன்றவை இல்லாமல் இருந்தது.
அது மட்டுமில்லாமல் இந்து கோவில்கள், இந்து மதம் பற்றிய எந்த ஒரு சர்ச்சையான வார்த்தைகளும் இல்லாமல் இருந்தது.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவுகிறது.
தீவிரவாத நடவடிக்கை தமிழகத்தில் மறைமுகமாக பல மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு என்று பல நாட்கள் தெரிவிக்கிறார்கள்.
இதில் முக்கியமாக கோயம்புத்தூர் மாவட்டம் பல்வேறு வகையான பிரச்சனைகளை திமுக அரசு மூலம் சந்தித்து வருகிறது.
திடீரென்று வெடித்த கார் சதிவேலை என்ன
கோயம்புத்தூரில் உக்கடம் அருகே காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தமிழகத்தில்.
இந்த நிலையில் அதில் உயிரிழந்த நபர் அவருடன் தங்கியிருந்த 4 நபர்கள் உட்பட 7நபர்களிடம் இப்பொழுது கோவை போலீசார் தனிப்பட்ட முறையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக அரசின் மெத்தன போக்கே இதற்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் நேரடியாக குற்றம் சாட்டி வருகிறது.
அடையாளம் கண்ட காவல்துறை
உயிரிழந்த நபர் ஜமேஷ் முபின் பொறியியல் பட்டதாரி என்பது தெரியவந்தது, அவர் ஓட்டி வந்த கார் சென்னை பதிவு கொண்ட பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் உயிரிழந்த நபரின் வீட்டில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை ஈடுபட்டார்கள்.
அப்போது அவரது வீட்டில் நாட்டு வெடி மருந்து தயாரிப்பதற்கு தேவையான வெடிபொருட்கள் 3 கிலோ அளவிற்கு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தார்கள்.
இப்பொழுது தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார் செய்யப்பட்டு தீவிரமாக சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் சோதனை செய்தும் பல நபர்களை கைது செய்தும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
7 நபர்களிடம் விசாரணை
தமிழகம் முழுவதிலும் அதிரடியான சோதனையை ஈடுபட்ட காவல்துறையினர் 7 நபர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு மத்திய அரசு தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கை அதிகரித்து விட்டது என்ற ஒரு அறிக்கையையும் அறிவித்தது.
இப்பொழுது தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகத்தில் புதிய அலுவலகத்தை திறந்து உள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையராக இருக்கும் திரு சைலேந்திர பாபு அவர்கள்.
கணையத்தை பாதுகாக்க உதவும் சிறந்த உணவு வகைகள்..!
இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் அதுமட்டுமில்லாமல் இது ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
கண்டனங்களை பதிவு செய்த கட்சிகள்
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இப்பொழுது அதிவேகமாக வளர்ந்து வரும் பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து.
Medical report regarding the death of Ms J Jayalalitha
முழுமையான விசாரணை நடைபெற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தொல் திருமாவளவன், சீமான், வைகோ, மற்றும் சில இடதுசாரி கட்சிகள் இந்த நிகழ்வு குறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.