
Causes and symptoms of pancreatic cancer in tamil
கணையப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன..!
கணைய புற்றுநோய் என்பது கணையத்தின் எந்தப் பகுதியிலும் வேண்டுமானாலும் ஏற்படும் புற்று நோயின் மிக கடுமையான வடிவமாகும்.
அதன் அறிகுறிகள் என்ன என்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
கணைய புற்றுநோய் என்பது வயிற்றுக்கு பின்னால் உள்ள சுரப்பியான கணையத்தின் உள்ள செல்கள்.
கட்டுப்பாட்டை மீறி அதிக அளவு வளர ஆரம்பிக்கும்போது கணைய புற்றுநோய் ஏற்படுகிறது.
இது உடல் முழுவதும் பெருகி மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை உடையது.
கணையப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன
கணையப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது மிகவும் கடினம் ஏனெனில் இது மற்ற பாதிப்பை ஏற்படுத்தும் வரை அதன் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியாது.
முதுகில் அசௌகரியம், பசியின்மை, எடை இழப்பு, மஞ்சள்காமாலை, சரும அரிப்பு, சோர்வு போன்றவை, இதன் அறிகுறிகளாக இருக்கிறது.
சிகரெட் பிடிப்பது, வயது முதிர்வு, நாள்பட்ட கணைய அழற்சி, நீரிழிவு நோய், அளவுக்கு அதிகமாக மது பழக்கம், மற்றும் உடல் பருமன், ஆகியவை கணையப் புற்று நோய்க்கான ஆபத்து காரணிகளாக இருக்கிறது.
கணைய புற்றுநோய் அல்லது மற்ற புற்றுநோய் குடும்ப வரலாற்றை கொண்டவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
இதனை கண்டறியும் சோதனைகள் என்ன
ரத்தப் பரிசோதனையின் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், பெருங்குடல், மற்றும் சிறுகுடல் உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பிட முடியும்.
அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன்
அதேபோல் அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் புற்றுநோய் கட்டி இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்.
எக்ஸ் கதிர்களை உடலில் செலுத்தி சிடி ஸ்கேன் மூலம் உடலின் உட்புறத்தில் புகைப்படங்களை எடுத்து அதன் மூலம் கண்டறியலாம்.
மேலும் எம்ஆர்ஐ அலைகளை பயன்படுத்தி கணையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை படம் பிடிக்கலாம்.
கீமோதெரபி மூலம் புற்றுநோய் செல்களை உயிர் இழக்க செய்ய முடியும் பெரும்பாலான புற்று நோய் சிகிச்சைகளுக்கு கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
கணையப் புற்றுநோய் விஷயத்தில் அறுவை சிகிச்சை சாத்தியமற்றது, என்றாலும் இதனால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும்
புற்றுநோய் சிகிச்சை அல்லது கீமோதெரபி பெரும் நோயாளிகளின் சிகிச்சை மட்டுமின்றி வாழ்க்கை தரத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.
உடலின் செயல்பாடு முக்கியம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிப்பது ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ரெசிஸ்டன்ஸ் உடற் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் கவலை மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் சோர்வு ஆகியவற்றை குறைத்துவிட முடியும் இது உங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.
இணையதளம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி..!
புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்
சிகரெட் புகைப்பதை விடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறமுடியும். மருந்துகள், கவுன்சிலிங், மற்றும் நிக்கோடின், மாற்று சிகிச்சை மூலம் புகைபிடிப்பதை விடலாம்.
ஆரோக்கியமான உணவு முறைகள்
பழங்கள், காய்கறிகள், முழுதானிய நிறைந்த உணவுகள், முட்டை, பால், மீன், போன்ற உணவுகள் புற்றுநோயின் அபாயங்களை குறைக்கும்.
How to make egg fried rice recipe in tamil 2022
புற்றுநோய் அறிகுறிகளை குணப்படுத்துவதற்கு பதிலாக அதை குறைப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.