
Central Government announced land reference number details
நிலத்திற்கு ஆதார் எண் கட்டாயம் அவசியம் ஏன்?அதன் பலன்கள் என்ன தெரியுமா..!
ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் நிலத்திற்கு தனித்துவமான பதிவு எண்ணை வெளியிட மத்திய அரசு இப்பொழுது தயாராகிவருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2022-2023 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்பொழுது நிலத்தின் டிஜிட்டல் பதிவும் இனிவரும் காலங்களில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு புதிய ஐடி அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
நில ஆவணங்களில் உதவியுடன் டிஜிட்டல் பதிவுகள் வைக்கப்படும் வருகின்ற மார்ச் மாதம் 2023க்குள் நாடு முழுவதும் நிலத்தின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் சில நிமிடங்களில் உங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள் உங்கள் கண் முன்பு டிஜிடல் முறையில் வந்து சேரும்.
நாட்டில் அல்லது இந்த உலகத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் நிலம் தொடர்பான தகவல்களை வீட்டில் இருந்து பெற முடியும்.
இதனுடைய நன்மைகள் என்ன
இந்த டிஜிட்டல் நில பதிவேடுகளை வைத்திருப்பதால் பல வழிகளில் நன்மைகள் கிடைக்கும், இது 3C சூத்திரத்தின் கீழ் வினியோகிக்கப்படும்.
இது அனைவருக்கும் நல்ல முறையில் பயனளிக்கும்,உங்களுடைய நிலங்களை யாரும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முடியாது அல்லது கைப்பற்ற முடியாது.
அதை வைத்து உங்களை மிரட்ட முடியாது, இதில் சாமானிய மக்கள் மத்திய பதிவுகள், பதிவுகள் சேகரிப்பு, பதிவுகளின் வசதி ஆகியவற்றால் பெரிதும் பயனடைவார்கள்.
நிலத்திற்கு 14 இலக்கு எண் அதாவது தனித்துவமான ஒரு எண் வழங்கப்படும், இதனை நிலத்தின் ஆதார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நிலம் சம்பந்தமான எந்த பிரச்சனையும் இருக்காது
ULPIN எண் மூலம் நிலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது, நிலையத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் பற்றிய முழு விவரமும் அனைவரும் முன்னிலையிலும் சேகரிக்கப்படும்.
எதிர்காலத்தில் அந்த நிலமும் பிரிக்கப்பட்டால், அந்த நிலத்தின் எண்ணும் வித்தியாசமான முறையில் மாற்றப்படும், டிஜிட்டல் பதிவேடு வைத்திருப்பதன் மூலம் நிலத்தின் உண்மை நிலை குறித்த அனைத்து தகவல்களும் முதலில் கிடைக்கும்.
ட்ரோன் கேமராக்கள் மூலம் அளவீடு செய்யப்படும், இதில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
டிஜிட்டல் பதிவேடு வைத்திருப்பதன் மூலம் எந்த ஒரு நபரும் தங்களது நிலத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது
அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது மாநிலங்களில் (பீகார், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், திரிபுரா, மற்றும் ஹரியானா,) முதலில் ஆதார் இணைப்பு தொடங்கும்.
பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள அறிவிப்பின்படி ஆதாரை ULPIN உடன் இணைப்பதற்கு ஒரு பதிவுக்கு குறைந்தபட்சம் 3 ரூபாய் மற்றும் ஆதார் விதைப்பு மற்றும் அங்கீகாரம் ஒரு பதிவுக்கு 5 ரூபாய் நிலத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டம் நமது நாட்டில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது டிசம்பர் 2014 இல் நில வள துறை ஆவணங்கள்.
(மகாராஷ்டிரா, ஹரியானா, திரிபுரா, தெலுங்கான, ஆந்திரபிரதேசம், மற்றும் இமாச்சல பிரதேசம்) ஆகிய மாநிலங்கள் பதிவுகளுடன் ஆதார் இணைக்கும் முன்னோடி திட்டங்களை தொடங்கி உள்ளன.
போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி..!
கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிலவள துறையும் சொத்து விற்பனை மற்றும் குத்தகை பதிவுக்கான அடையாள சான்றாக ஆதார பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவித்துள்ளது.
morning breakfast for school students in Chennai
நிலத்தின் ஆதார் எண் விருப்பமானது இல்லை கட்டாயம் அதனை நிலம் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.