செய்திகள்

மிகப்பெரிய வேலைவாய்ப்பு 70,000 நபர்களுக்கு பணி நியமனம் கடிதம் வழங்குகிறார் பிரதமர்..!Central Government job orders PM Modi issues today

Central Government job orders PM Modi issues today

Central Government job orders PM Modi issues today

மிகப்பெரிய வேலைவாய்ப்பு 70,000 நபர்களுக்கு பணி நியமனம் கடிதம் வழங்குகிறார் பிரதமர் 44 இடங்களில் வேலை வாய்ப்பு திருவிழா..!

70,000 க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்,7வது ரோஜ்கார் மேலாவில் இந்த பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காகவே ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த வருடம் அக்டோபர் 22ஆம் தேதி நம் நாட்டில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,இந்த நிலையில் 7வது ரோஜ்கார் மேல திருவிழா இன்று நடைபெறுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியீட்டு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது,அந்த அறிவிப்பில் மத்திய அரசு பணிகளுக்கு.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது பணிநேயமான ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்ற உள்ளார்.

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்

நாடு முழுவதும் 44 இடங்களில் வேலை வாய்ப்பு திருவிழா  நடைபெற உள்ளது.

இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலை வாய்ப்புகள் நடைபெறுகிறது.

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள் வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொது துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மற்றும் உள்துறை அமைச்சகம்.

உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் துறைகளில் பணிகளில் சேர உள்ளார்கள்.

பணி நியமனக் கடிதம் வழங்கப்படுகிறது

அதன்படி மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று பணி நியமன கடிதங்களை வழங்க உள்ளார்.

நாடு முழுவதிலுமிருந்து  அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் வருவாய் துறை, நிதி சேவை துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை பாதுகாப்பு அமைச்சகம்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது அப்போது நாடு முழுவதும் 44 இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்பிகள், பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள்.

அதேபோல் புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், கர்மயோகி பிரம்மாண்ட்ஸ் இணையதள திட்டத்தின் மூலம் சிறப்பு பயிற்சி பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is really happening in Manipur

How to message on WhatsApp without saving number

Tasmac case in Madras High Court 2023

How to apply for change of patta through online

What is your reaction?

Excited
1
Happy
3
In Love
1
Not Sure
0
Silly
0